புதிதாக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கும் முன் இதையெல்லாம் கவனிங்க! இந்த தப்பை பண்ண வேணாம்
நமது வாழ்வின் ஒரு அங்கமாகவே ஸ்மார்ட்போன் மாறி விட்டது! தினமும் வகை வகையான பல்வேறுபட்ட அம்சங்களை கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளிவருகின்றன.
புது ஸ்மார்ட்போனை வாங்கும் முன் கவனிக்க வேண்டிய விடயங்கள் என்னென்ன?
ஸ்மார்ட்போன் விலை
ஒரு புதிய கையடக்க தொலைபேசியை கொள்வனவு செய்ய நினைக்கையில் முதலில் தீர்மானிக்க வேண்டியது விலை தான். அனைத்து கையடக்க தொலைபேசிகளும் அதன் விலைக்கேற்றவகையில் அவை கொண்டிருக்கும் வசதிகள் நிர்ணயிக்கப்படுகிறது. ஆகவே, ஸ்மார்ட்போன் கொள்வனவு செய்ய முன் முதலில் விலையை தான் முடிவு செய்ய வேண்டும். அப்போதுதான் நாம் முடிவு செய்த பெறுமதிக்குறிய சிறந்த போனை வாங்கலாம்.
NextPit
பிராண்ட்
தற்போது சந்தையில் ஆப்பிள் (Apple), சாம்சங் (Samsung), நோக்கியா (Nokia), ஹுவாவி (Huawei) போன்ற பல பிரசித்திபெற்ற நம்பகரமான பிராண்டுகள் கிடைக்கின்றன. அவற்றில் நமக்கு பிடித்தமான, பயன்படுத்துவதற்கு இலகுவான பிராண்டை தெரிவு செய்ய வேண்டும். ஏனென்றால் சிலவேளை ஒரே விலையாக இருந்தாலும் வெவ்வேறு பிராண்டுகளில் வேறுபட்ட வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.
செயலி
ஸ்மார்ட்போனின் இயக்கத்தில் செயலி மிக முக்கியமான ஒரு பங்கு வகிக்கிறது. நீங்கள் கொள்வனவு செய்ய இருக்கும் ஸ்மார்ட்போனின் பயன்பாட்டின் அடிப்படையில் உங்களுக்கு சரியான செயலியை கொண்ட ஸ்மார்ட்போனை தெரிவு செய்யலாம்.
நீங்கள் உங்களது ஸ்மார்ட்போனில் சாதாரணமான பணிகளை மட்டும் செய்ய விரும்பினால் அதாவது அழைப்புகளை மேற்கொள்ளல் (Calls), குறுந்தகவல்கள் (SMS) பறிமாற்றம், சில ஆப்களை பயன்படுத்தல் போன்றவாறான பணிகளை செய்ய விரும்பினால் சாதாரண செயலியை கொண்ட ஸ்மார்ட்போன் போதுமானது.
அவ்வாறு இல்லாமல் புகைப்படம் மற்றும் கானொளிகள் தொகுப்பு (Edit) செய்தல், விளையாட்டுக்கள் விளையாடல், நிறைய ஆப்கள் பயன்படுத்தல், இணையத்தில் அதிகமாக உலாவுதல் போன்ற பணிகளை செய்ய எதிர்பார்த்தால் சிறந்த செயலியை கொண்ட போனை வாங்க வேண்டும். ஆண்ட்ரொய்ட் எனின் அதற்கு க்வால்கொம் ஸ்னெப்ட்ரேகன் (Qualcomm Snapdragon) வகை செயலிகள் சிறந்தவை. ஆப்பிள் செயலிகள் பொதுவாகவே சிறந்தவையாகும்.
சேமிப்பகம்
ஸ்மார்ட்போனில் ஆப்கள், புகைப்படங்கள் (Images), கானொளிகள் (Videos), ஆவணங்கள் (Documents) போன்ற அனைத்தையும் சேமித்து வைக்க சேமிப்பகம் உதவுகிறது. தற்போது நாம் அனைத்துவிதமான கோப்புகளையும் ஸ்மார்ட்போனிலேயே சேமித்துவைத்துள்ளோம். காரணம் நமது அவசர வாழ்க்கையில் அனைத்து பணிகளையும் எளிதில் செய்து முடிப்பதற்காகும்.
அத்துடன் பொழுதுபோக்கு அம்சங்களான பாடல்கள், திரைப்படங்கள் போன்றவற்றையும் சேமித்துவைத்திருப்போம். மேலும் புகைப்படங்கள் எடுக்கையில், கானொளிகள் பதிவு செய்கையில் அதிக இடவசதி தேவைப்படும். ஆகவே சேமிப்பகம் அதிகமாக இருக்கும் மொபைல் போனை வாங்குவது நல்லது. குறைந்தது 32GB சேமிப்பகம் கொண்ட போனை வாங்குவது பயன் தரும்.
கெமரா
ஸ்மார்ட்போனில் எவ்வசதி எவ்வாறு இருந்தாலும் நாம் முதலில் பார்ப்பது, கேமரா நன்றாக உள்ளதா என்று தான். காரணம் செல்பி (Selfie) நன்றாக இருக்கவேண்டும் என்ற ஆர்வம் தான். ஆகவே, மெகாபிக்ஸல் (Mega Pixels) அதிகமாக உள்ள போனை கொள்வனவு செய்தால் ஆசைபடும் வகையில் அழகான வண்ணம் நிறைந்த புகைப்படங்கள் மற்றும் கானொளிகளை பதிவு செய்ய முடியும்.