உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் செய்யவே கூடாத 5 விஷயங்கள்!
ஸ்மார்ட்போன் வைத்திருக்காத ஆட்களை பார்ப்பதே அரிது என்றாகிவிட்டது. அந்த அளவுக்கு அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. தனிப்பட்ட பயன்பாட்டைப் பொருத்தவரை, பலர் தங்கள் ஸ்மார்ட்போன்களை கவனக்குறைவாகப் பயன்படுத்துகிறார்கள்.
ஸ்மார்ட்போனில் நீங்கள் செய்யக்கூடாத விஷயங்கள் குறித்து காண்போம்.
சார்ஜிங்
உங்கள் ஸ்மார்ட்போனை நீண்ட நேரம் சார்ஜ் செய்யும் பழக்கத்தை நிறுத்துங்கள், இது அதிக வெப்பத்திற்கு வழிவகுக்கும். போனை சார்ஜ் செய்தவுடன் போனுடனான மின் இணைப்பை துண்டிக்க மறக்காதீர்கள்.
simplemost
செல்போனை நெஞ்சுக்கு அருகே வைக்க வேண்டாம்.
உங்கள் ஸ்மார்ட்போனை நெஞ்சு பகுதிக்கு அருகே வைக்க வேண்டாம், இது உடல்நலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
போனை சார்ஜ் செய்யும் போது இயர்போன்கள் வேண்டாம்
ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது இசையைக் கேட்க இயர்போன்களை பயன்படுத்த வேண்டாம். இது ஸ்மார்ட்போன் மின்கசிவு தொடர்பான விபத்துகளை ஏற்படுத்தும்.
சூரியஒளி
உங்கள் ஸ்மார்ட்போனை நேரடியாக சூரிய ஒளியில் வெளிப்படுத்தாதீர்கள், குறிப்பாக சார்ஜ் செய்யும் போது நேரடி சூரிய ஒளியில் வைக்கவே கூடாது.
ஸ்மார்ட்போன்களை அங்கீகரிக்கப்படாத கடைகளில் கொடுக்காதீர்கள்
உங்கள் ஸ்மார்ட்போனை அங்கீகரிக்கப்படாத கடைகளில் பழுது பார்க்க கொடுக்க வேண்டாம். அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டுமே கொடுக்கவும், ஏனெனில் அசல் பாகங்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய இது முக்கியம்.
மேலும், அங்கீகரிக்கப்படாத கடைகள் உங்களுக்குத் தெரியாமல் உங்கள் தரவைச் சேகரிக்கலாம்.
misterminit