இந்தியாவின் மூன்றாவது பெரிய கோடீஸ்வரர் இவர்... யார் இந்த ஷபூர் மிஸ்திரி
இந்தியாவின் டாடா குழுமத்துடன் பல தொழில்களில் இணைந்து செயல்படும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தற்போதைய தலைவர் ஷபூர் மிஸ்திரி என்பவரே இந்தியாவின் மூன்றாவது பெரிய கோடீஸ்வரர்.
தற்போதைய தலைவர் ஷபூர் மிஸ்திரி
157 வருடங்களாக பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டுவரும் ஷபூர்ஜி பல்லோன்ஜி குழுமத்தின் தற்போதைய தலைவர் ஷபூர் மிஸ்திரியின் சகோதரர் தான் டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக செயல்பட்ட சைரஸ் மிஸ்திரி.
செப்டம்பர் 2022ல் சாலை விபத்தில் சிக்கி சைரஸ் மிஸ்திரி மரணமடைந்தார். ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான கௌதம் அதானியை அடுத்து, மூன்றாவது பெரிய கோடீஸ்வரராக பட்டியலிடப்பட்டுள்ளார் ஷபூர் மிஸ்திரி.
இவரது SP குழுமம் பொறியியல் மற்றும் கட்டுமானம், சரக்கு கப்பல், ஜவுளி, வீட்டு உபயோக பொருட்கள், உயிரி தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் சிறப்பாக செயலாற்றி வருகிறது.
உலகின் 47 வது பணக்காரர்
மட்டுமின்றி, SP குழுமம் டாடா சன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக உள்ளது. தற்போது 58 வயதாகும் ஷபூர் மிஸ்திரி கடந்த 2012ல் தான் பாரம்பரியம் மிக்க SP குழுமத்தின் தலைவராக பொறுப்புக்கு வந்தார்.
ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், ஷபூர் மிஸ்திரி தற்போது இந்தியாவின் மூன்றாவது பணக்காரர் மற்றும் உலகின் 47 வது பணக்காரர் ஆவார்.
அவரது மொத்த சொத்து மதிப்பானது (31.1 பில்லியன் டொலர்) ரூ.258,000 கோடி என கூறப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் ஷபூர் மிஸ்திரி 3.34 பில்லியன் டொலர் தொகையை தமது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளார் என ப்ளூம்பெர்க் தகவல் வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |