ஆயிரக்கணக்கானோருடன் கோலாகலமாக இடம்பெற்ற சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் (Photos)
மட்டக்களப்பு, களுதாவளை சுயம்புலிங்கப்பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது. நேற்றையதினம் (27.06.2023) இந்த தீர்த்தோற்சவம் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆலயம் இலங்கையில் தானாக தோன்றிய மூலமூர்த்தியை கொண்டுள்ள ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது.
அருளாட்சி புரிந்துவரும் ஆலயம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுதாவளை பிரதேசத்தில் நீர் நிலைகளும் வயல்வெளிகளும் சூழ பல்லாண்டு காலமாக அருளாட்சி புரிந்துவரும் அருள்மிகு களுதாவளை சுயம்புலிங்க பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 10 தினங்களும் சிறப்பாக இடம்பெற்றது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வி.கு.சிறிஸ்கந்தராஜா குருக்களின் தலைமையில் இடம்பெற்ற உற்சவத்தில் மாம்பழத்திருவிழா சிறப்பாக இடம்பெற்றதுடன் விநாயகவழிபாடுகளுடன் திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
அதனைத்தொடர்ந்து வசந்த மண்டப பூசை இடம்பெற்று சுவாமி தீர்த்தக்கேணிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிறப்பு பூசைகள் செய்யப்பட்டு தீர்த்த உற்சவம் இடம்பெற்றுள்ளது.
இந்த தீர்த்த உற்சவத்தில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |