Thiruchendur Soorasamharam: திருச்செந்தூர் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நேரலை.. குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிழச்சியான சூரசம்ஹாரம் இன்று (நவ.18) நடைபெற்று உள்ளது.
இதனால், லட்சக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். கடந்த 13 -ம் திகதி கந்த சஷ்டி விழா தொடங்கிய நிலையில், தினமும்யாகசாலை பூஜை, ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அலங்காரம், தங்க ரதத்தில் வீதியுலா ஆகிய நிகழ்ச்சியுடன் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
சூரசம்ஹாரத்துக்காக மாலை 4 மணிக்கு சுவாமி கடற்கரைக்கு எழுந்தருளுகிறார். பின்னர் லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் அங்குகஜமுகம், சிங்கமுகம் மற்றும்சுயரூபத்துடன் வரும் சூரபத்மனை வதம் செய்கிறார். சூரசம்ஹாரம் முடிந்த பிறகு சுவாமிக்கும், அம்பாளுக்கும் தீபாராதனை நடைபெறும்.
நீங்கள் வீட்டில் இருந்து கொண்டே சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை பார்க்க இந்த நேரலை விடியோவை பார்க்கவும்.