திருக்குறள் அதிகாரம் ஒன்று
தெய்வப்புலவர் என்று போற்றப்படும் திருவள்ளுவரால் தான் திருக்குறள் இயற்றப்பட்டது.
இதில் 133 அதிகாரங்களும், ஒரு அதிகாரத்தில் 10 குறள்களும், மொத்தமாக 1330 குறள்களும் காணப்படுகின்றது.
இவைகள் தான் அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துபால் என்று மூன்றாக பிரித்துக்கூறுவார்கள்.
மேலும் இது தொடர்பாக மேலும் தெரிந்துக்கொள்ள தினமும் வரவிருக்கும் திருக்குறள் பதிவை தொடர்ந்து படியுங்கள்.
ஒவ்வொரு நாளும் 10 குறள்கள் வீதம் தரப்படும்.
1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
9. கோளில் பொறியில் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |