CM 2031 பதிவெண் கொண்ட காரில் சென்ற திருமாவளவன் - போலியான பதிவெண்?
thirumalavan travelled in car with tn 07 cm 2031 registration plate: CM 2031 பதிவெண் கொண்ட காரில் திருமாவளவன் சென்ற வீடியோ வெளியான நிலையில், அது இருசக்கர வாகனத்தின் பதிவெண் என்பது தெரிய வந்துள்ளது.
CM 2031 காரில் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன், சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக காரில் வருகை தந்தார்.
தலைவர்-CM-2031...💥TN https://t.co/SJzXAWxl94 2031
— THANJAI.LENIN VCK (@VckLenin) September 20, 2026
சென்னை பூந்தமல்லி இவிபி அரங்கில் நடைபெற்ற "திருமா 35 -சமூகநீதியின் சகாப்தம்' நிகழ்ச்சிக்கு தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் வருகை தந்த வாகனம் தொண்டர்களின் கவனத்தை ஈர்த்தது.! pic.twitter.com/RYyUkNYkZd
திருமாவளவன், TN 07 CM 2031 என்ற பதிவெண் கொண்ட காரில் வந்துள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை விசிகவினர் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

அவர் ஜாக்குவார் போன்ற காரில் பயணித்தாக வீடியோ வெளியான நிலையில், அதே பதிவெண் கொண்ட Tesla காரில் திருமா இருப்பது போன்ற புகைப்படங்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
முதலமைச்சர் விஜய் நடித்த கோட் திரைப்படத்தில் CM 2026 எண் கொண்ட கார் இடம்பெற்றிருந்தது அனைவரது கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவெண் மூலம் 2031 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திருமாவளவன் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுகிறாரா என விவாதம் எழுந்துள்ளது.
அதேவேளையில், டெஸ்லா மின்சார கார் என்பதால், அதற்கு பச்சை நிறத்திலே நம்பர் பிளேட் வழங்கப்பட்டிருக்கும். இந்த புகைப்படத்தில் வெள்ளை நிறத்தில் நம்பர் பிளேட் உள்ளதால் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என தெரிய வந்துள்ளது.
மேலும், மத்திய அரசின் பாரிவாகன் இணையதளத்தில் TN 07 CM 2031 என்ற பதிவெண்ணை வைத்து ஆய்வு செய்தபோது, அது ஹோண்டா டியோ என்ற இருசக்கர வாகனத்தின் பதிவெண் என்பது தெரிய வந்துள்ளது.
There are reports on television claiming that VCK leader #Thirumavalavan travelled in a car bearing registration number TN 07 CM 2031. However, when the registration number is searched, it appears to be registered to a two-wheeler. Hope @ChennaiTraffic looks into this and… pic.twitter.com/JEVh5yi50u
— Harish M (@chnmharish) September 21, 2026
அதில், ஹெல்மெட் அணியாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக அபராதம் விதிக்கப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணை, காருக்கு பயன்படுத்தியதற்கு கார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.