தவெக அமைச்சரவையில் இடம்பெறும் விசிக? திருமாவளவன் பதில்
அமைச்சரவையில் விசிக இடம்பெற தவெக அழைப்பு விடுத்தது குறித்து திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
தவெக அமைச்சரவையில் விசிக?
முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் 9 அமைச்சர்கள் உள்ள நிலையில், நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், தவெக கூட்டணியில் இணைந்துள்ள 5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ்க்கு 2 அமைச்சர் பதவி ஒதுக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் பெரும்பான்மைக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக அறிவித்தன.
இந்நிலையில், விசிக மற்றும் முஸ்லீம் லீக் தமிழக அமைச்சரவையில் இடம் பெற முதல்வர் விஜய் விரும்புவதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
திருமாவளவன் பதில்
இது குறித்த பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவன், "வேளச்சேரி வந்தபோது விஜய் விருப்பத்தை வெளிப்படுத்தினார், தற்போது தவெக வெளிப்படையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜூனாவின் அழைப்புக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

மேலும், அதிமுகவில் இருந்து விலகி இருக்கிற ஒரு பிரிவினருக்கு அமைச்சரவையில் இடம் தருவதற்கான வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பில் இருந்து தரப்பட்டிருக்கிறது. இந்த அழைப்பு குறித்து முன்னணி பொறுப்பாளர்களுடன் கலந்து பேசி முடிவை அறிவிப்போம்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |