துவாரகா என்று பேசிய பெண் தலைவரின் மகளா? விசிக தலைவர் திருமாவளவன் சொன்னது என்ன?
ஈழ விடுதலைப் போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் நினைவாக நவம்பர் 27ஆம் திகதி இலங்கை தமிழர்களால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
மாவீரர் நாள்
நேற்றைய தினம் மாவீரர் நாளில் மறைந்த விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் மகள் உரையாற்ற உள்ளார் என்ற அறிவிப்பு வெளியானது.
அதனைத் தொடர்ந்து யூடியூப் சேனல் மூலமாக பெண்ணொருவர் பேசிய வீடியோ ஒளிபரப்பானது.
அதில் தன்னை துவாரகா என அறிமுகம் செய்துகொண்ட பெண் தமிழீழம் உருவாகும் காலம் வரும் என்ற நம்பிக்கை இருக்கிறது என சில விடயங்களை பேசினார்.
அதன் பின்னர் வீடியோவில் பேசிய பெண் தலைவரின் மகள் அல்ல என்று பலர் கூறிவரும் நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனும் குறித்த பெண் மீது தலைவரின் மகள் இல்லை என்பதை பூடகமாக தெரிவித்துள்ளார்.
முன்னணி தளபதிகள் யாரும் கூறவில்லை
இதுகுறித்து மேடைப்பேச்சு ஒன்றில் அவர் கூறும்போது, 'தலைவரின் மகள் துவாரகா இன்று இணைய ஊடகத்தில் தோற்றமளித்தார் என்ற செய்திகள் வெளிவந்திருக்கின்றன. அதை தமிழ்நாட்டில் இருந்து சிலர் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து யாரும் சொல்லவில்லை.
புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகள் அதை சொல்லவில்லை. இயக்கத்தைச் சார்ந்த முன்னணி தளபதிகள் யாரும் அதை சொல்லவில்லை. இப்படி ஒரு நிலை இன்றைக்கு ஈழத்தமிழ் சொந்தங்கள் இடையே இருப்பது என்பது தான் வேதனைக்குரியது' என என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |