தித்திக்கும் சுவையில் திருபாகம்.., எப்படி செய்வது?
திருபாகம் என்பது திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற, பாரம்பரியமான ஒரு இனிப்பு வகை ஆகும்.
இது கந்த சஷ்டி விழா மற்றும் தைப்பூசம் போன்ற முருகப்பெருமான் பண்டிகைகளின் போது நெய்வேத்தியமாக படைக்கப்படும் ஒரு சிறப்பான பிரசாதமாகும்.
அந்தவகையில், தைபூசத்தை முன்னிட்டு தித்திக்கும் சுவையில் திருபாகம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- முந்திரி- 10
- கடலை மாவு- 1 கப்
- பால்- 1 கப்
- குங்குமப்பூ- 5 இதழ்
- சர்க்கரை- 1 கப்
- நெய்- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் முந்திரி சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலில் கடலை மாவு சேர்த்து லேசாக வறுத்துக்கொள்ளவும்.

பின் அதில் பால் சேர்த்து நன்கு கலந்து கெட்டியாகி வந்ததும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கலக்கவும்.
இதற்கடுத்து இதில் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து அவ்வப்போது நெய் சேர்த்து கிளறவும்.
வாணலில் ஒட்டாமல் வந்ததும் இறக்கினால் சுவையான திருபாகம் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |