பெற்றோரின் வேண்டுதலை நிறைவேற்ற மலையேறிய புதுமாப்பிள்ளை மரணம்! திருமணமான 15 நாட்களில் சோகம்
தமிழகத்தின் திருத்தணியைச் சேர்ந்த நபர் ஒருவர் திருமணமான 15 நாட்களில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுமாப்பிள்ளை
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த நரேஷ் என்ற நபர், கடந்த 15 நாட்களுக்கு முன்பு சுவாதி என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
அதன் பின்னர் 23ஆம் திகதி பெற்றோரின் வேண்டுதலை நிறைவேற்ற திருப்பதி சென்றுள்ளார். அங்கு நரேஷ் குடும்பத்துடன் மலையேறியுள்ளார்.
அவர் 2,350வது படியில் காலை வைக்கும்போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை குடும்பத்தினர் அருகில் உள்ள வைத்தியசாலையில் சேர்த்தனர்.
மாரடைப்பு
மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிய அவர் தெரிவித்தனர்.
அலிபிரி மலைப்பாதையில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான 15 நாட்களில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |