திருவண்ணாமலை தீபம் அன்று அவசியம் வீட்டில் செய்ய வேண்டியவை என்ன?
Thiruvannamalai Deepam- திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயிலின் 10 நாள் கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்டது.
இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. தீப தரிசனம் மற்றும் கிரிவலத்திற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில் சிவன் திருமால் மற்றும் பிரம்மனுக்கு அக்னி வடிவமாகக் காட்சி தந்ததை நினைவுகூரும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
பர்வத ராஜகுல மரபினரால் மலை உச்சியில் உள்ள இரும்புக் கொப்பரையில் நெய் மற்றும் காடா துணி கொண்டு மகா தீபம் ஏற்றப்பட்டுப் பராமரிக்கப்படுகிறது.
அந்தவகையில், திருவண்ணாமலை தீபம் அன்று அவசியம் வீட்டில் செய்ய வேண்டியவை குறித்து ஆன்மிக பேச்சாளர் விஜயகுமார் இக்காணொளியில் பகிர்ந்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |