திருவண்ணாமலை கார்த்திகை தீபம்! நேரலை இதோ உங்களுக்காக
திபஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா இன்று நடைபெற்று கொண்டு வருகிறது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டை போலவே தற்போதும் மாடவீதிகளில் சுவாமி உற்சவ விழா நடைபெற்று வருகின்றன. இந்த விழா நாட்களில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அனுமதி சீட்டு பெற்றவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபத்தை நேரில் பார்ப்பவர்களின் 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்கும் என்று சொல்லப்படுகின்றது.
அந்தவகையில் இதனை நாமும் நேரலையாக காண கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.