திருவிடைக்கழி முருகன் இரணியாசுரனை வதம் செய்த காட்சி
தமிழ் நாட்டில் மிக முக்கியமான முருகன் கோவில்களில் திருவிடைக்கழி முருகன் கோவிலும் ஒன்று.
முருகனின் அறுபடை வீடுகளைத் தவிர, அவர் காலடி பட்ட தலங்கள் தமிழ்நாட்டில் இரண்டு மட்டுமே.
ஒன்று முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்த வள்ளிமலை. மற்றொன்று, தான் பாப விமோசனம் பெறுவதற்காக, முருகன் தவம் இயற்றிய இந்த திருவிடைக்கழி.
திருச்செந்தூரில் சூர சம்ஹாரம் முடிந்த பின்பு, சூரபத்மனின் இரண்டாவது மகன் இரண்யாசுரன் தன் உருவை மாயையால் சுறா மீனாக மாறி, பூம்புகார் பகுதியிலுள்ள கீழச்சமுத்திரத்தில் பதுங்கி, அங்கிருந்த அனைத்து உயிர்களையும் துன்புறுத்தி வந்தான்.
முருகப்பெருமான் அவனையும் வைகாசி மாதம் சதயம் நட்சத்திரத்தன்று வதம் செய்தார்.
இந்நிலையில், முருகன் இரணியாசுரனை வதம் செய்த நிகழ்வு இன்று திருவிடைக்கழி கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது.
இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனின் அருளாசியை பெற்றுச்சென்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |