கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமாக வேண்டுமா? இந்த ஜுஸ்களை தினமும் குடிங்க போதும்!

Covid Juice CoronaVirus
By Kaviarasan May 20, 2021 05:11 PM GMT
Report
Courtesy: OneIndiaTamil

கொரோனா இரண்டாம் அலையில் ஒவ்வொரு நாளும் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த கொடிய கொரோனாவின் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருக்க ஒவ்வொருவரும் மாஸ்க்குகளை தவறாமல் அணிவதோடு, தேவையில்லாமல் வெளியே சுற்றுவதைத் தவிர்த்து, சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். அதோடு உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முயற்சிக்க வேண்டும். அதற்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் பெரிதும் உதவி புரிகின்றன.

இவற்றில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. எனவே ஒருவர் தினமும் போதுமான பழங்கள் மற்றும் காய்கறிகளை அன்றாடம் தவறாமல் எடுக்க வேண்டும்.

கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமாக வேண்டுமா? இந்த ஜுஸ்களை தினமும் குடிங்க போதும்! | This 6 Juices Safe With Coronavirus

இதனால் உடலுக்குத் தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்சிடின்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் கிடைக்கும். கோவிட்- 19 செரிமான மண்டலத்தை பாதித்து, திசுக்களை சேதப்படுத்தி, வயிற்றில் அழற்சியை உண்டாக்குகின்றன.

நற்பதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் செரிமான மண்டலத்தால் எளிதில் உறிஞ்சப்பட்டு ஒரு குணப்படுத்தும் மற்றும் இனிமையான விளைவை அளிக்கிறது.

அதிலும் ஜூஸ்கள் /பானங்கள் இரத்த நாளங்களால் விரைவில் உறிஞ்சப்படுவதால், உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்க ஜூஸ்களைக் குடிப்பது சிறந்த வழியாகும். இதனால் இது கொரோனாவில் இருந்து விரைவில் மீள உதவுகிறது. காய்கறிகள் மற்றும் பழ ஜூஸ்களை ஒரு நாளைக்கு இரண்டு-மூன்று முறை குடிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரித்து வலுவாக்குவதோடு, உடலினுள் உள்ள அழற்சியையும் குறைக்கிறது. ஆகவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒருசில ஜூஸ்களைக் குடிப்பதால் விரைவில் கொரோனாவில் இருந்து குணமாகலாம்.

கீழே நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 6 ஜூஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தக்காளி புதினா ஜூஸ்

தக்காளி புதினா ஜூஸ் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது மற்றும் இது செரிமானத்தை சீராக்க உதவுகிறது.

கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமாக வேண்டுமா? இந்த ஜுஸ்களை தினமும் குடிங்க போதும்! | This 6 Juices Safe With Coronavirus 

இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு, பிளெண்டரில் 4 தக்காளி உடன் எட்டு-பத்து புதினா இலைகளைப் போட்டு, ஒரு டம்ளர் நீரை ஊற்றி நன்கு அரைத்து, அதில் சிறிது உப்பு, எலுமிச்சை சாறு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து கலந்தால், ஜூஸ் சுவையாக இருப்பதோடு, ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும்.

கேரட், பீட்ரூட், நெல்லி மற்றும் இஞ்சி ஜூஸ்

கேரட் மற்றும் பீட்ரூட் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தம் செய்ய உதவுகிறது மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இது நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சிறந்தது.

கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமாக வேண்டுமா? இந்த ஜுஸ்களை தினமும் குடிங்க போதும்! | This 6 Juices Safe With Coronavirus

இவற்றைக் கொண்டு ஜூஸ் தயாரிக்க, பிளெண்டரில் 2 கேரட், ஒரு பீட்ரூட், 2 நெல்லிக்காய் மற்றும் ஒரு இன்ச் இஞ்சியை நறுக்கிப் போட்டு, ஒரு டம்ளர் நீர் ஊற்றி நன்கு அரைக்க வேண்டும். பின் அதில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்த்தால், ஜூஸ் தயார்.

சாத்துக்குடி, அன்னாசி மற்றும் பச்சை ஆப்பிள் ஜூஸ்

இந்த ஜூஸ் வைட்டமின் சி மற்றும் கால்சியம் சத்தை அதிகம் உள்ளடக்கியது. இத்தகைய ஜூஸ் நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தியை மேம்படுத்துவதோடு, செரிமானத்தை சிறப்பாகவும் வைத்துக் கொள்ள உதவும்.

கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமாக வேண்டுமா? இந்த ஜுஸ்களை தினமும் குடிங்க போதும்! | This 6 Juices Safe With Coronavirus

இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு, பிளெண்டரில் 2 சாத்துக்குடி, 250 கிராம் அன்னாசிப்பழம் மற்றும் ஒரு பச்சை ஆப்பிளை நறுக்கிப் போட்டு, சிறிது கல் உப்பு சேர்த்து அரைத்தால், ஜூஸ் தயார். கிவி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சு ஜூஸ் இந்த ஜூஸ் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்தது மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் சிறந்தது.

அதோடு இது இரத்த அழுத்த அளவைப் பராமரிக்க உதவுகிறது மற்றும் நோய்வாய்ப்படுவதைத் தடுக்கிறது. இந்த ஜூஸ் தயாரிப்பதற்கு, ஒரு கப் ஸ்ட்ராபெர்ரி, 2 தோலுரித்த கிவி மற்றும் ஒரு தோல் நீக்கிய ஆரஞ்சு பழத்தை பிளெண்டரில் போட்டு, அரை கப் நீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து நன்கு அரைத்தால், ஜூஸ் தயார்.

மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு

மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு இந்த பொருட்கள் அனைத்திலுமே அழற்சி எதிர்ப்பு பண்புகளுடன், ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் உள்ளன.

கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமாக வேண்டுமா? இந்த ஜுஸ்களை தினமும் குடிங்க போதும்! | This 6 Juices Safe With Coronavirus 

இந்த பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரிப்பதற்கு, பிளெண்டரில் ஒரு தோலுரித்த ஆரஞ்சு, ஒரு எலுமிச்சை சாறு, ஒரு துண்டு இஞ்சி மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி, சுவைக்கேற்ப தேன் சேர்த்தால், ஜூஸ் தயார்.

வெள்ளரிக்காய், பசலைக்கீரை, செலரி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஜூஸ்

ஒருவர் வெள்ளரிக்காய், பசலைக்கீரை, செலரி, இஞ்சி மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை அன்றாட உணவில் சேர்த்து வந்தாலே, ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமாக வேண்டுமா? இந்த ஜுஸ்களை தினமும் குடிங்க போதும்! | This 6 Juices Safe With Coronavirus

ஏனெனில் இவை உடலினுள் உள்ள அழற்சியைக் குறைக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன. இந்த பொருட்களைக் கொண்டு ஜூஸ் தயாரிப்பதற்கு, 2 தோலுரித்த வெள்ளரிக்காய், 100 கிராம் பசலைக்கீரை, 4 செலரி துண்டுகள், 1 இன்ச் இஞ்சி ஆகியவற்றை பிளெண்டரில் போட்டு அரைத்து, அத்துடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்தால், ஜூஸ் தயார். 

மரண அறிவித்தல்

கைதடி, Isle of Wight, United Kingdom

30 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், யாழ்ப்பாணம்

31 Oct, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

30 Oct, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

24 Oct, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை வீமன்காமம், அராலி தெற்கு

21 Oct, 2026
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

13 Nov, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொட்டடி, கொட்டாஞ்சேனை

31 Oct, 2020
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Scarborough, Canada

28 Oct, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, நெல்லியடி, மண்டபம், India, Harrow, United Kingdom

30 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

27 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, கனடா, Canada

31 Oct, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வவுனியா

27 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், வட்டக்கச்சி, சுவிஸ், Switzerland

30 Oct, 2020
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US