ரூ.45 கோடி சொத்தை நாய்களுக்கு எழுதி வைத்த நடிகர்.., யார் தெரியுமா?
பொதுவாக நாய் வளர்ப்பு என்பது அனைவருக்கும் விருப்பமான ஒன்று.
பலர் நாய்களுக்கு அதீத கவனிப்பும், உபசரிப்பும், உயர் ரக உணவுகளையும் ஊட்டி வளர்க்கும் பலரை காண முடியும்.
அந்த வகையில், நடிகர் ஒருவர் 116 நாய்களை வளர்த்து வருகிறாராம். அவர் தான் பழம்பெரும் பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி (74).
செல்லப்பிராணி பிரியரான அவர் தனது சொத்தில் ரூ.45 கோடியை நாய் வளர்ப்புக்காக மட்டும் எழுதி வைத்துள்ளார்.
1970களில் இந்தி, பெங்காலி ஆகிய மொழி படங்களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி (74).
செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்ட மிதுன் சக்கரவர்த்தி, உலகின் எப்பகுதிக்குச் சென்றாலும் அங்கிருக்கும் நாய் வகைகளை வாங்கி வந்துவிடுவாராம்.
அதேபோல, சுற்றுலா செல்லும்போது தனது நாய்களைக் கையோடு குழந்தைகளைப் போல அழைத்துச் சென்றுவிடுபவர்.
சுமார் 119 நாய்கள் வரை வைத்துள்ள மிதுன், இந்த நாய்களுக்கெனப் பிரத்தியேகமாக மும்பை அருகில் இருக்கும் மட் தீவில் 1.5 ஏக்கரில் பெரிய பண்ணை ஒன்றை வைத்துப் பராமரித்து வருகிறார்.
பல பணியாளர்கள் இங்கு வேலை செய்கின்றனர். ஏராளமான தெரு நாய்களையும் தத்தெடுத்து இங்குப் பராமரித்து வருகிறார்.
விளையாட்டு மைதானம், உணவு சாப்பிடும் இடம், மருத்துவ வசதி எனப் பல வசதிகள் அங்கு இருக்கின்றன.
அங்கு ஒவ்வொரு நாய்களுக்கும் தனித்தனியே அறைகள் இருக்கின்றன. மேலும், இவர் நாய்களைப் பராமரிப்பதற்காகவே ரூ. 45 கோடி சொத்தை எழுதி வைத்துள்ளாராம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |