இனி இந்த நாட்டு மக்களுக்கு fast-track விசா கிடையாது: சுவிட்சர்லாந்து முடிவு
ரஷ்ய மக்கள் யாருக்கும் fast-track விசா வழங்குவதில்லை என சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
ஆனால், ரஷ்யர்களுக்கு சாதாரண விசா வழங்குவதில் தடையேதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இனி ரஷ்ய மக்கள் யாருக்கும் fast-track விசா வழங்குவதில்லை என சுவிட்சர்லாந்து முடிவு செய்துள்ளது.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து ஐரோப்பிய ஒன்றியம் இதுபோன்ற சிறப்பு விசாக்களை ரஷ்யர்களுக்கு வழங்குவதில்லை என முடிவு செய்தது. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தைப் பின்பற்றி சுவிட்சர்லாந்தும் இந்த முடிவை எடுத்துள்ளது.
சுவிட்சர்லாந்துக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் 2009ஆம் ஆண்டு செய்யப்பட்ட ஒப்பந்தம் ஒன்றின்படி வழங்கப்பட்டு வந்த இந்த fast-track விசா என்பது, சில நபர்களுக்கு விசா வழங்கும் நடைமுறையை எளிதாக்குவதுடன், அவர்களுக்கான சில கட்டணங்களை குறைக்கவோ அல்லது நீக்கவோ செய்யும்.
உக்ரைன் போரைத் தோடர்ந்து ரஷ்யா மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளில் ஒன்றாக, தற்போது ரஷ்யர்களுக்கு இந்த fast-track விசா வழங்குவது முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஆனால், ரஷ்யர்களுக்கு மற்ற நாட்டவர்களுக்கு வழங்கப்படுவதைப்போல் சாதாரண விசா வழங்குவதில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.