கதவைத் திறந்தால் பக்கத்து நாட்டுக்குச் செல்லலாம்: ஒரு வித்தியாசமான ஹொட்டல்
This Hotel Lets You Sleep In France And Switzerland At The Same Time: இந்த ஹொட்டலில் நீங்கள் தலையை பிரான்சிலும், காலை சுவிட்சர்லாந்திலும் வைத்தபடி தூங்கலாம்.
பிரான்ஸ், சுவிஸ் எல்லையிலுள்ள, La Cure என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது, ஆர்பஸ் ஹொட்டல்.
தலை பிரான்சில், கால் சுவிட்சர்லாந்தில்...
விடயம் என்னவென்றால், இந்த ஹொட்டலின் ஒரு பாதி பிரான்சிலும், மறு பாதி சுவிட்சர்லாந்திலும் அமைந்துள்ளன.

ஆக, இந்த ஹொட்டலில் தங்கினால், கதவைத் திறந்தாலே பக்கத்து நாட்டு எல்லைக்குள் சென்றுவிடலாம். அதேபோல, தலையை பிரான்சிலும், காலை சுவிட்சர்லாந்திலும், அல்லது தலையை சுவிட்சர்லாந்திலும், காலை பிரான்சிலும் வைத்தபடி தூங்கலாம்.
1860களில், பிரான்சும் சுவிட்சர்லாந்தும் தங்கள் எல்லைகளை மறுவரைவு செய்யப்போவதை அறிந்த போந்துஸ் என்பவர், சரியாக எல்லைக்கோடு அமைய இருக்கும் இடத்தில் இந்த ஒரு கட்டிடத்தைக் கட்டியுள்ளார்.
எல்லை பிரிப்பதற்கு முன் கட்டப்பட்ட எந்த கட்டிடமும், எல்லை பிரிக்கப்பட்டபின்பும் அப்படியே நீடிக்க அனுமதிக்கப்படும் என்பதால், இந்தக் கட்டிடமும் அப்படியே இருந்துவிட்டது.
பல ஆண்டுகளுக்குப் பின், ஜூல்ஸ் ஜோசப் ஆர்பஸ் என்பவர் அந்தக் கட்டிடத்தை வாங்கி, அதை ஒரு ஹொட்டலாக மாற்றிவிட்டார்.
அவர் பெயரால்தான் இந்த ஹொட்டல் ஆர்பஸ் ஹொட்டல் என அழைக்கப்படுகிறது.
ஆக, ஹொட்டலிலுள்ள உணவருந்தும் இடம், படிக்கட்டுகள் என பல இடங்கள் பாதி பிரான்சிலும், மீதி சுவிட்சர்லாந்திலுமாக அமைந்துள்ளன.
சில அறைகளில் பாதி பிரான்சிலும், மீதி சுவிட்சர்லாந்திலுமாக அமைந்துள்ளதால், நீங்கள் ஒரு நாட்டில் தலையையும், அடுத்த நாட்டில் காலையும் வைத்தபடி தூங்கலாம்.