அடேங்கப்பா! இந்த தாத்தாவின் பங்கு மதிப்பு ரூ.100 கோடி.. வியக்க வைக்கும் சொத்து மதிப்பு
பிரபல நிறுவனங்களில் ரூ.100 கோடி பங்கு வைத்திருக்கும் எளிமையான தாத்தாவின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரூ.100 கோடி பங்கு வைத்திருக்கும் முதியவர்
பொதுவாக சிலரை ஆளை பார்த்து எடை போடக் கூடாது என்று சொல்வார்கள். அதை போல தான் இந்த கிராமத்தில் இருக்கும் முதியவரும். தற்போது, இவர் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறார்.
இந்த முதியவருக்கு பிரபல நிறுவனமான எல் அண்டு டி (L&T) -யில் ரூ.80 கோடி மதிப்புள்ள பங்குகளும், அல்ட்ரா சிமென்ட் (Ultrtech cement) நிறுவனத்தில் ரூ. 21 கோடி மதிப்புள்ள பங்குகளும் உள்ளன.
மேலும், கர்நாடகா வங்கிகளில் ரூ.1 கோடி பங்கு மதிப்பும் இவருக்கு உள்ளது. இவரின், இந்த அசாத்திய சொத்து மதிப்பு ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது.
வைரல் வீடியோ
பிரபல வர்த்தக நிபுணரான ராஜிவ் மேத்தா தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், முதியவர் ஒருவர் டிரவுசர் அணிந்து கொண்டு நிற்கிறார்.
As they say, in Investing you have to be lucky once
— Rajiv Mehta (@rajivmehta19) September 26, 2023
He is holding shares worth
₹80 crores L&T
₹21 crores worth of Ultrtech cement shares
₹1 crore worth of Karnataka bank shares.
Still leading a simple life#Investing
@connectgurmeet pic.twitter.com/AxP6OsM4Hq
இந்த எளிமையான முதியவருக்கு தான் பிரபல நிறுவனங்களில் ரூ.100 கோடி பங்கு மதிப்பு உள்ளது. மேலும், இவர், தன்னுடைய சொத்து மதிப்பு மற்றும் பங்கு குறித்து வீடியோவில் தெளிவாக கூறுகிறார்.
இவருடைய தனிப்பட்ட விவரங்கள் ஏதும் வீடியோவில் இல்லை. தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவை, எளிமையின் வலிமை இது தான் என்று பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |