இந்த பழக்கத்தை கொண்டவர்களுக்கு! புற்றுநோய் வருவதற்கு கூட வாய்ப்பிருக்காம் உஷார்
வயது வித்தியாசமின்றி பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் உள்ளது. கோபம் வரும் போதும், விரும்பத்தகாத செயல்களை செய்கிற போதும் நகம் கடிப்பவர்கள் ஏராளமானோர். நகம், பாக்டீரியா வளரும் இடம்.
சல்மனெல்லா (Salmonella), இ.கோலி (E.Coli) பாக்டீரியாக்கள் நகம், விரல் நுனிகளில் இருக்கும் அழுக்குகளில் இருக்கின்றன. நகங்களைக் கடிக்கும் போது அவை வாய் வழியே உடலின் மற்ற பாகங்களுக்கும் பரவும்.
இதனால் எளிதில் நோய்த் தொற்று ஏற்படும்.உடல் எதிர்ப்புச் சக்தி பாதிப்படைந்து நோய்களுக்கு வழிவிட காரணமாகும். பாரனைஷியா (Paronychia) என்கிற தோல் வியாதி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.
நகங்களில் இருக்கும் பாக்டீரியா, ஈஸ்ட், நுண்ணுயிரிகள் ஒன்று சேர்ந்து நகங்களின் மேல் தோலை சிவப்பாக்கி, தடித்து வீங்க வைத்துவிடும்.
காலப்போக்கில் சீழ் கட்டவும் வாய்ப்பிருக்கிறது. அதை அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே சரி செய்ய முடியும்.நகம் கடிப்பவர்களின் விரல் நுனிகளில் கிருமிகள் சேர்ந்து ஹியூமன் பாப்பில்லோமா வைரஸ் (human papilloma virus) தாக்குதல் ஏற்படும் அபாயம் இருக்கிறது.
இது அதிகமாகும்போது புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பும் உண்டு. நகம் கடிப்பதால் பற்களில் பாக்டீரியா, வைரஸ் கிருமிகள் ஊடுருவி மேல் தாடையையும் கீழ் தாடையையும் முழுதாக மூட முடியாத நிலை கூட ஏற்படும்.
அமெரிக்கன் மனநல ஆய்வகம், நகம் கடித்தலை எண்ண சுழற்சி நோயின் (Obsessive Compulsive Disorder) அறிகுறி என்கிறது. பிடிக்காத செயலை செய்யும்போதும் சோர்வு தரும் சூழ்நிலைகளிலும் நகம் கடிக்கும் பழக்கம் ஆரம்பிக்கிறதாம்.
சிறியவர்கள் நகம் கடிப்பதால் செரிமானமாகாத உணவுத் துணுக்குகள் குடல் வால் பகுதியில் சேகரமாகும்.
அதனால், 'அப்பன்டிசைடிஸ்' எனப்படும் குடல் வால் வருவதற்கும் வாய்ப்புண்டு.
எனவே சிறுவயதிலேயே நகம் கடிக்கும் பழக்கத்தை விட்டு விடுவது சிறந்தது.