சுவிட்சர்லாந்தில் இருந்து வருபவர்களுக்கு இது கட்டாயம்! பிரபல நாடு முக்கிய அறிவிப்பு
சுவிட்சர்லாந்தில் இருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா இல்லை என்ற சோதனை முடிவை வழங்க வேண்டும் என இத்தாலி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சுவிஸின் Ticino மண்டலத்தின் எல்லையில் அமைந்துள்ளது இத்தாலியின் Lombardy பகுதி.
திங்கட்கிழமை Lombardy பகுதி ஆரஞ்சு நிறத்தில் இருந்து மஞ்சள் மண்டலத்திற்கு மாறியது, அதாவது அங்கு கொரோனா வைரஸ் ஆபத்து இப்போது குறைவாக உள்ளது.
இத்தாலியின் கொரோனா ஆபத்து வகைப்பாடு முறையின் கீழ், சிவப்பு அதிக ஆபத்தை குறிக்கிறது, ஆரஞ்சு நடுத்தரமானது, மஞ்சள் மிகக் குறைவு ஆகும்.
இந்நிலையில் சுவிஸிலிருந்து சுற்றுலா அல்லது பொருட்கள் வாங்க Lombardy-க்கு செல்ல விரும்புவோர் கடந்த 48 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சோதனை முடிவை வழங்காமல் இத்தாலி எல்லையை கடக்க முடியாது.
வேலை, சுகாதாரம் அல்லது அவசரநிலை போன்ற காரணங்களுக்காக 120 மணி நேரத்திற்கு மிகாமல் இத்தாலிக்குச் செல்வோர் மட்டுமே சோதனையிலிருந்து விலக்கு பெறுவார்கள்.
இத்தாலி வழியாக 36 மணி நேரம் வரை பயணம் செய்யும் நபர்களுக்கும் இந்த விலக்கு பொருந்தும்.