நல்லா விளையாடிக் கொண்டிருந்த இலங்கை வீரரை இப்படியா அவுட்டாக்குவீங்க? வைரலாகும் வீடியோ: கோபத்தில் ரசிகர்கள்
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில், இலங்கை அணி வீரர் தனுஷ்கா குணதிலகாவிற்கு கொடுக்கப்பட்ட அவுட் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை அணி மேற்கிந்திய தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொடரை மேற்கிந்திய தீவு அணி வென்ற நிலையில், இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று Sir Vivian Richards Cricket மைதானத்தில் நடைபெற்றது.
முதலில் ஆடிய இலங்கை அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ஓட்டங்கள் எடுக்க, அடுத்து ஆடிய மேற்கிந்திய தீவு அணி 2 விக்கெட் இழப்பிற்கு 236 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Out or not?#WIvSLpic.twitter.com/zsFkfr5n69
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 11, 2021
இப்போட்டியில் இலங்கை அணியின் துவக்க வீரரான தனுஷ்கா குணதிலகா அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி வந்தார்.
இவர் 55 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, பொல்லார்ட் ஓவரை எதிர் கொண்ட போது, பந்தை தடுத்தாடிவிட்டு ஓட முயற்சி செய்தார்.
ஆனால், அதற்கு பொல்லார்ட் ஓடி வந்துவிட்டதால், கிரிஸை அடைவதற்கு பின்னால் சென்றார். ஆனால் பந்தானது எதிர்பார்தவிதமாக அவர் பின் காலில் பட்டு சென்றுவிட்டது.
Out or not?#WIvSLpic.twitter.com/zsFkfr5n69
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 11, 2021
இதைக் கண்ட பொல்லார்ட் அவுட் என்று நடுவரிடம் கேட்க, நடுவர் மூன்றாவது நடுவரிடம் சென்றார். மூன்றாவது நடுவர் அவுட் என்று கொடுத்தார்.
இது இப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குணதிலகா பந்தை அடித்துவிட்டு ஓடும் போது, பின்னால் பந்து இருந்ததை அவர் பார்க்கவில்லை, எதிர்பாரமலே பந்து பட்டு சென்றுவிட்டது, இது எதுவும் திட்டமிட்டு தடுக்கவில்லை, இதற்கு அவுட் தர தேவையில்லை என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த வீடியோவை இணைத்தில் பதிவிட்டு NOTOUT என்ற ஹேஷ்டேக்கை டிரண்டாக்கி வருகின்றனர்.