இது பிரித்தானியா மகாராணிக்கும் அரச குடும்பத்திற்கும் இழைக்கப்பட்ட இழிவான துரோகம்! ஹரி-மேகன் செயலால் கொந்தளித்த பிரபலம்
Oprah Winfrey உடனான இளவரசர் ஹரி-மேகன் தொலைக்காட்சி நேர்காணல், பிரித்தானியா மகாராணிக்கும் அரச குடும்பத்திற்கும் இழைத்த இழிவான துரோகம் என பிரபல பிரிட்டிஷ் ஊடகவியலாளர் பியர்ஸ் மோர்கன் விமர்சித்துள்ளார்.
அரச குடும்ப பதவியிலிருந்து விலகி ஒரு வருடத்திற்கு பிறகு இளவரசர் ஹரி-மேகன் தம்பதி முதன் முறையாக Oprah Winfrey உடனான தொலைக்காட்சி நேர்காணல் அளித்தனர்.
இந்த நேர்காணலில் இருவரும் தங்களுக்கு அரச குடும்பத்தில் நடந்த கசப்பான சம்பங்களை பகிர்ந்தனர்.
இதுகுறித்து பியர்ஸ் மோர்கன் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இந்த நேர்காணல் பிரித்தானியா மகாராணி மற்றும் அரச குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட இழிவான துரோகம்.
Let’s be clear: Prince Harry and his wife just spent two hours trashing everything the Queen stands for & has worked so hard to maintain, whilst pretending to support her.
— Piers Morgan (@piersmorgan) March 8, 2021
And they did it while her 99yr-old husband Philip is seriously ill in hospital.
It’s contemptible. pic.twitter.com/W8dBoNI7d8
மேகன் மெர்க்கலிடமிருந்து இந்த மோசமான சொந்த நலனுக்கான முட்டாள்தனத்தை நான் எதிர்பார்த்தேன்.
ஆனால் மேகன் தனது குடும்பத்தையும், மகாராணியையும் இதுபோன்று அசிங்கப்படுத்துவதை ஹரி அனுமதிப்பது அவமானகரமானது என தெரிவித்துள்ளார்.
This interview is an absolutely disgraceful betrayal of the Queen and the Royal Family. I expect all this vile destructive self-serving nonsense from Meghan Markle - but for Harry to let her take down his family and the Monarchy like this is shameful. #OprahMeghanHarry pic.twitter.com/F2QDxELSsr
— Piers Morgan (@piersmorgan) March 8, 2021
ஹரிக்கு தனது குடும்பத்தை, மகாராணியை மற்றும் நாட்டை, அமெரிக்க உட்பட உலக நாடுகள் வெறுக்க வேண்டும் என்ற எண்ணம்.
மகாராணி கடின உழைப்பை இரண்டு மணிநேர நேர்காணலில் இளவரசர் ஹரி-மேகன் தவுடுபொடி ஆக்கிவிட்டனர்.
மகாராணியின் 99 வயதான கணவர் பிலிப் மருத்துவமனையில் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது இளவரசர் ஹரி-மேகன் இவ்வாறு செய்தது இழிவானது என பியரஸ் மோர்கன் கொந்தளித்துள்ளார்.