என்ன விளையாடுறாங்க.. மிக மோசம்! நடப்பு சாம்பியன் அணியை வெளிப்படையாக விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் கேப்டன்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பேட்டிங்கை விமர்சித்துள்ளார்.
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 12 சுற்றில் குரூப் 1ல் இடம்பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ்-வங்க தேசம் அணிகள் விளையாடி வருகின்றன.
இரு அணிகளும் விளையாடிய இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்துள்ளன.
இதனால், இந்த போட்டியில் தோல்வியடையும் அணி டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றோடு வெளியேறுவது ஏறக்குறைய உறுதியாகிவிடும்.
இப்போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி முதல் பீல்டிங்கை தேர்வு செய்தது.
முதல் பேட்டிங்கை செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது.
கெயில் (4), எவின் லூயிஸ் (6), ஹெட்மியர் (9), கேப்டன் போலார்டு 8 ரன்களில் தானாகவே பேட்டிங்கிலிருந்து ஓய்வு பெற்று ஆடுகளத்தை விட்டு வெளியேறினார்.
அதைத்தொடர்ந்து ஆண்ட்ரூ ரசல் (0), பூரன் (40), ரோஸ்டன் சேஸ் (39), பிராவோ (1) ரன்களில் ஆட்டமிழந்தனர்.
கடைசி ஓவரில் மீண்டும் களமிறங்கிய போலார்டு கடைசி பந்தில் சிக்சர் அடித்தார், அவருடன் ஜேசன் ஹொல்டர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் எடுத்திருந்தார்.
இந்நிலையில் 143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்க தேச அணி களமிறங்கி விளையாடி வருகிறது.
இதனிடையே, வாழ்வா.. சாவா போட்டியில் வெஸ்ட் இண்டீஸின் பேட்டிங் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் என்ன செய்கிறார்கள்! இது மிக மோசமான பேட்டிங் என மைக்கேல் வாகன் விமர்சித்துள்ளார்.
What are the West Indies doing !!!!!!!!!! This is horrendous batting … #T20WorldCup
— Michael Vaughan (@MichaelVaughan) October 29, 2021
நடப்பு சாம்பியனான வெஸ்ட் இண்டிஸ் 2012 மற்றும் 2016 என இரண்டு முறை டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.