சீனாவுக்கு இது நல்லதல்ல! பிரித்தானியா எச்சரிக்கை
பிரித்தானியர்கள் மற்றும் பிரித்தானியா நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது சீனாவிற்கு நல்லதல்ல என பிரித்தானியா அமைச்சர் எச்சரித்துள்ளார்.
Xinjiang பிரச்சினையுடன் தொடர்புடைய பிரித்தானியர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பதாக சீனா அறிவித்தது.
Xinjiang பிரச்சினை தொடர்பில் பொய்களையும் தவறான தகவல்களையும் தீங்கிழைக்கும் வகையில் பரப்பும் பிரித்தானியாவைச் சேர்ந்த Tom Tugendhat, Iain Duncan Smith, Neil O'Brien, David Alton, Tim Loughton, Nusrat Ghani, Helena Kennedy, Geoffrey Nice, Joanne Nicola Smith Finley ஆகிய ஒன்பது நபர்கள் மீதும் பொருளாதார தடை விதிப்பதாக சீனா அறிவித்தது.
மேலும், சீனா ஆராய்ச்சி குழு, கன்சர்வேடிவ் கட்சி மனித உரிமைகள் ஆணையம், உய்குர் தீர்ப்பாயம் மற்றும் எசெக்ஸ் கோர்ட் சேம்பர்ஸ் ஆகிய நான்கு நிறுவனங்கள் மீதும் சீன பொருளாதார தடை விதித்தப்பதாக அறிவித்தது.
சீனா எங்கள் எம்.பி-க்கள் மீது தடைகளை விதிப்பது முற்றிலும் தவறு என்று நான் நினைக்கிறேன், இது சீனாவுக்கு நல்லதல்ல என்று பிரித்தானியா வீட்டுவசதி அமைச்சர் ராபர்ட் ஜென்ரிக் கூறினார்.
இந்த நடவடிக்கையால் எம்.பி.க்கள் மௌனம் ஆக்கப்படுவார்கள் அல்லது அச்சுறுத்தப்படுவார்கள் என்று நான் சந்தேகிக்கிறேன் என ராபர்ட் ஜென்ரிக் கூறினார்.
இந்த வாரத்தின் தொடக்கத்தில்,மேற்கு சீன பிராந்தியத்தில் மனித உரிமை மீறல்களுக்கு பிரித்தானியா பொருளாதாரத் தடைகளை விதித்தது நினைவுக்கூரத்தக்கது.
