இது எங்கள் குழந்தையல்ல, எங்கள் குழந்தையை மாற்றிவிட்டார்கள்: இறந்த குழந்தையை வைத்துக்கொண்டு போராடும் பெற்றோர்

baby US
By Balamanuvelan Apr 30, 2021 11:35 AM GMT
Report

அமெரிக்க மருத்துவமனை ஒன்று தங்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக கூறி, தங்கள் குழந்தை தங்களுக்கு வேண்டும் என போராடி வருகிறார்கள் ஒரு தம்பதியர். Mario Barrales தன் மனைவியான Guadalupe Vélezஐ லாஸ் ஏஞ்சல்சிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பிரசவத்துக்காக அனுமதித்தார்.

ஆனால், குழந்தையை வெளியே எடுத்து சென்ற செவிலியர் ஒருவர் தங்கள் குழந்தையை மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்கள் Barralesம் Guadalupeவும். குழந்தை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டபோது, அது தங்கள் குழந்தையல்ல என்பது தெளிவாக தெரிந்ததாக தெரிவிக்கிறார் Guadalupe.

அந்த குழந்தையின் தோல் நிறம், தொப்புளின் அமைப்பு மற்றும் உடல் வடிவம் ஆகியவை வித்தியாசமாக இருந்ததாக தெரிவிக்கும் Guadalupe, அது தன் குழந்தையல்ல என்கிறார்.

இது எங்கள் குழந்தையல்ல, எங்கள் குழந்தையை மாற்றிவிட்டார்கள்: இறந்த குழந்தையை வைத்துக்கொண்டு போராடும் பெற்றோர் | This Is Not Our Baby They Have Changed Our Baby

அந்த குழந்தை ஐந்து நாட்களில் உயிரிழந்தும் விட்டிருக்கிறது. அதற்கு நுரையீரல் மற்றும் மூலையில் பிரச்சினை இருப்பது தெரியவந்துள்ளது. ஆக, தன் ஆரோக்கியமான குழந்தையை வேறொருவரிடம் கொடுத்துவிட்டு, நோய்வாய்ப்பட்ட ஒரு குழந்தையை தன்னிடம் மருத்துவமனை ஊழியர்கள் கொடுத்துவிட்டதாக குற்றம் சாட்டுகிறார் Guadalupe.

அதற்கு ஆதாரமாக தன் குழந்தை பிறந்தவுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மட்டுமின்றி வேறு சில விடயங்களையும் எடுத்துக் காட்டுகிறார் Guadalupe.

ஒரு நாள் தன் உறவினர்கள் தன் குழந்தையைப் பார்க்க வந்ததாகவும், அவர்களை மருத்துவமனை ஊழியர்கள் வேறொரு அறைக்கு அனுப்பிவிட்டதாகவும், அந்த அறையிலும் Guadalupe என்ற பெயரில் ஒரு பெண் இருந்ததாகவும், அவருக்கும் ஒரு குழந்தை பிறந்திருந்ததாகவும் தெரிவிக்கிறார் Guadalupe, அத்துடன், இரண்டு குழந்தைகளும் பெண் குழந்தைகள்! மேலும், ஆஸ்துமாவுக்கான இன்ஹேலர் ஒன்றை அவருக்கு கொடுத்திருக்கிறார் ஒரு செவிலியர், அது எதற்கு என்று கேட்டால், உங்களுக்கு ஆஸ்துமா பிரச்சினை இருக்கிறதல்லாவா அதற்குத்தான் என்று கூறியிருக்கிறார் அந்த செவிலியர்.

இது எங்கள் குழந்தையல்ல, எங்கள் குழந்தையை மாற்றிவிட்டார்கள்: இறந்த குழந்தையை வைத்துக்கொண்டு போராடும் பெற்றோர் | This Is Not Our Baby They Have Changed Our Baby

Guadalupeக்கு ஆஸ்துமா பிரச்சினையே இல்லை. அடுத்தபடியாக, உங்கள் குழந்தை இறந்ததற்கு காரணம், நீங்கள் போதைப்பொருள் அருந்துபவர் என்பதால்தான் என்றும் கூறியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

Guadalupe போதைப்பொருளை தொட்டுப் பார்த்தது கூட கிடையாதாம்! ஆக, Guadalupe என்ற பெயரில் உள்ள மற்றொரு பெண்ணிடம் தன் குழந்தையை செவிலியர்கள் தவறுதலாக கொடுத்துவிட்டார்கள் என்கிறார்கள் Barralesம் Guadalupeவும்.

இது எங்கள் குழந்தையல்ல, எங்கள் குழந்தையை மாற்றிவிட்டார்கள்: இறந்த குழந்தையை வைத்துக்கொண்டு போராடும் பெற்றோர் | This Is Not Our Baby They Have Changed Our Baby

அத்துடன் DNA சோதனை செய்யலாம் என்றால், DNA மாதிரி எடுக்க மருத்துவமனை ஊழியர்கள் அனுமதிக்கவேயில்லையாம்.

ஆங்கிலமும் தெரியாமல், லாஸ் ஏஞ்சல்சில் உள்ள சட்டத்தரணிகள் தங்கள் வழக்கை எடுக்கவும் முன்வராததால் திகைத்துப் போய் நிற்கிறார்கள் Barralesம் Guadalupeவும்.

லாஸ் ஏஞ்சல்சைச் சேர்ந்த சட்டத்தரணிகள், தாங்கள் மருத்துவ அமைப்புக்கு எதிராக வழக்குத் தொடுக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டார்களாம்.


மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

வசவிளான், யாழ்ப்பாணம், Canberra, Australia

03 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
நன்றி நவிலல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் புதுறோடு, கொழும்பு

08 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, விசுவமடு

06 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாதகல், நல்லூர், புளியங்குளம், மதவுவைத்தகுளம்

09 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US