நடிகர் மணிவண்ணன் இறப்பிற்கு காரணம் இது தான்.., 10 ஆண்டுகள் கழித்து வெளிவந்த உண்மை
இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் இறப்ப்பிற்கான காரணம் குறித்து அவரது தங்கை பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.
குடியால் மணிவண்ணன் இறப்பு
தமிழக மாவட்டம், கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த மணிவண்ணன், வசனம், திரைக்கதை, இயக்கம் என பல பரிமாணங்களில் வலம் வந்தார். இவர், தனது திறமையான நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர்.
கடந்த 2013 -ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மணிவண்ணன் (59) உயிரிழந்தார். இவருடைய மரணத்திற்கு குடிப்பழக்கம் தான் காரணம் என சொல்லப்பட்டது.
தங்கை கூறிய காரணம்
இந்நிலையில், மணிவண்ணனின் தங்கை சமீபத்திய பேட்டி ஒன்றில், "எனது அண்ணன் குடியால் இறக்கவில்லை. அவர் இறப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பாகவே குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டார்.
என் அண்ணன் கடைசியாக கொடுத்த பேட்டியில் கூட கால் இடறி விழுந்து அடிபட்டு விட்டதால் 2 மாதங்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். கடந்த 2004 -ம் ஆண்டு எனது அண்ணிக்கு புற்றுநோய் இருப்பது அவருக்கு தெரியவந்தது.
அதனால், அந்த மன உளைச்சலிலே எனது அண்ணன் இருந்தார். அதன்பிறகு தான் அவர் உயிரிழந்தார். அண்ணன் இறந்த சில மாதங்களிலே அண்ணியும் உயிரிழந்தார்" என்றார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு மணிவண்ணன் இறப்பு குறித்த காரணத்தை அவரது தங்கை பகிர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |