நீண்ட காலம் வாழ ஜிம்முக்குப் போவதை விட சிறந்த உடற்பயிற்சி இதுதான்: நிபுணர் கூறும் ரகசியம்
நீண்ட காலம் வாழ விரும்புவோர், ஜிம்முக்குப் போவதை விட சிறந்த உடற்பயிற்சி ஒன்று உள்ளது என்கிறார், உலகம் சுற்றும் நிபுணர் ஒருவர்.
ஜிம்முக்குப் போவதை விட சிறந்த உடற்பயிற்சி
90, 100 வயது வரை வாழ்வோர் பலர், தாங்கள் நீண்ட காலம் வாழ்வதற்கு தோட்டக்கலை மீதான காதல் ஒரு காரணம் என்று கூறியுள்ளதாக Dan Buettner என்பவர் தெரிவித்துள்ளார்.
Dan Buettner, உலகில் மக்கள் நீண்ட காலம் வாழும் நாடுகளுக்குச் சென்று, அங்குள்ள மக்களை சந்தித்து பேட்டி கண்டுள்ளவர் ஆவார்.
காரணம் என்ன?
அதாவது, தோட்டத்தில் வேலை செய்வோருக்கு, தாங்கள் தங்கள் தோட்டத்தில் வளர்க்கும் காய்கனிகளை உண்ண ஆர்வம் ஏற்படுகிறது. தங்கள் தோட்டத்திலுள்ள தாவரங்களை தினமும் சென்று பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்துடன், களை பறிப்பது, நீர் பாய்ச்சுவது மற்றும், விளைந்த காய்கனிகளைப் பறிப்பதற்காக அவர்கள் கொஞ்சம் உடலை வளைத்து வேலையும் செய்யவேண்டியுள்ளதால், அவர்கள் உடலுக்கு கொஞ்சம் உடற்பயிற்சியும் கிடைக்கிறது.
Image: Zoe
நீங்கள் உங்கள் தோட்டத்தில் வேலை செய்யும்போது உங்கள் உடலில் சுரக்கும் cortisol அல்லது stress hormoneஇன் அளவு குறைகிறது. மண்ணில் வேலை செய்த கையுடன் முகத்தைத் துடைப்பதால் கையிலுள்ள நல்ல நுண்ணுயிர்கள் வாய் வழியாக உடலுக்குள் செல்கின்றன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆக, நீண்ட நாள் வாழ விரும்புவோர், ஜிம்முக்குப் போவதை விட சிறந்த உடற்பயிற்சி ஒன்று உள்ளதென்றால், அது நம் தோட்டத்தில் வேலை செய்வதுதான் என்கிறார் Dan Buettner.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |