மறைந்த இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசை இதுதான்: அரண்மனை வட்டாரங்கள் வெளியிட்ட தகவல்
வீட்டில் தனது சொந்த படுக்கையில் நிம்மதியாக இறக்க வேண்டும் என்பதே மறைந்த இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசையாக இருந்தது என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் கணவர் இளவரசர் பிலிப் தமது 99வது வயதில் இன்று காலை வின்ட்சர் கோட்டையில் வைத்து காலமானார்.
ஆனால் குறித்த தகவலை பக்கிங்ஹாம் அரண்மனை மதியத்திற்குப் பிறகு மட்டுமே பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளது.
வின்ட்சர் கோட்டையில் வைத்து, தமது படுக்கையில் நிம்மதியாக இறக்க வேண்டும் என்பதே இளவரசர் பிலிப்பின் கடைசி ஆசையாக இருந்தது என தற்போது அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளவரசர் பிலிப், வின்ட்சர் கோட்டைக்கு கொண்டு செல்லப்பட்டது, அவரது கடைசி ஆசையின் ஒருபகுதியாகவே என தங்களுக்கு புரிந்தது என அரண்மனை ஊழியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இளவரசர் பிலிப்பின் இன்னொரு ஆசை அவரது இறுதிச் சடங்கு தொடர்பானது. பொதுவாக அரச குடும்பத்து உறுப்பினர்கள் மறைந்தால், அவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு முன்னெடுக்கப்படும்.
ஆனால், தமக்கு அதில் விருப்பம் இல்லை என தெரியப்படுத்தியுள்ள இளவரசர் பிலிப், மாறாக இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து வின்ட்சரில் உள்ள செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் நடைபெறும் இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் இராணுவ மரியாதையுடன் ஃப்ராக்மோர் கார்டனில் நல்லடக்கம் செய்யப்படுவார் என்றே தெரிய வந்துள்ளது.

