உலகிலே அதிக விஷத் தன்மை கொண்ட இனம் இது! வீட்டுக்குள்ள விட்ராதீங்க: மக்களுக்கு விடுக்கப்பட்ட பெரும் எச்சரிக்கை
அவுஸ்திரேலியா வெள்ளப் பெருக்கு காரணமாக எட்டுகால் கொண்ட விஷப் பூச்சிகள் வீட்டிற்குள் நுழையலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில், கடந்த ஐம்பது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கன மழை பெய்து கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்திவிட்டது.
இதனால் அப்பகுதியில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக கொடிய விஷமுள்ள எட்டுக்கால் பூச்சிகள் பொதுமக்களின் வீடுகளுக்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த வெள்ளப்பெருக்கினால் அடித்து வரப்பட்டுள்ள எட்டுக்கால் பூச்சிகள உலகிலேயே அதிக விஷமுள்ள இனத்தை சேர்ந்தவை என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், வெள்ளம் காரணமாக எட்டுக்கால் பூச்சியால் பிளேக் போன்ற நோய் பரவ வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தினங்களுக்கு பின் நேற்று தான் சூரிய வெளிச்சம் தென்பட்டுள்ளதால், அந்த சூரிய வெளிச்சம் காரணமாக உடனடியாக விஷத் தன்மை கொண்ட எட்ட்டுக்கால் பூச்சிகள் படையெடுக்கக்கூடும் என்று எச்சரித்துள்ளதால், மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
இந்த விஷமுள்ள எட்டுக்கால் பூச்சிகள் கடித்து ஏற்கெனவே சிலர் இறந்திருப்பதும் சற்று அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.