தர்மத்திற்கு முன்னோடியாக இருக்கும் கர்ணன் முற்பிறவியில் யார் ?
கர்ணன் முற்பிறவியில் ஒரு அரக்கர் குலத்தை சேர்ந்தவர் என இதிகாச கதைகள் கூறுகின்றன.
முன்னைய ஜென்மத்தில் கர்ணனின் பெயர் சகஸ்ரகவஸர் ஆகும். அவர் அசுரர் குலத்தில் பிறந்ததால் அவரோடே சேர்ந்து அவரது அசுர குணங்கள் தொற்றி கொண்டு வளர்ந்தன.
அவர் சாகாமல் உயிர் வாழ வேண்டும் என எண்ணி சாகா வரம் பெறுவதற்காக ப்ரம்ம தேவனை நோக்கி கடும் தவம் செய்தார். இவ்வாறு அவர் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்துள்ளார்.
காற்று, மழை, புயல் என எதனாலும் இவரது தவத்தை கலைக்க முடியாது போனது. இதனால் ப்ரம்ம தேவர் மனம் குளிர்ந்து, சகஸ்ரகவசா உனக்கு என்ன வேண்டும் என கேட்க இவர் தனது ஆசையை கூறி தனக்கு வேண்டுமான வரத்தினை பெற்றார்.
அந்த கணம் அவனுக்கு கர்வம் கூடி தேவர்கள் முனிவர்கள் என எல்லாரையும் தொந்தரவு செய்து பல தவறுகளை செய்தான்
தேவர்கள் முனிவர்கள் என அனைவரும் விஷ்ணுவிடம் முறையிட, விஷ்ணு கடவுள் 12 ஆண்டுகள் இதற்காக கடும் தவம் மேற்கொண்டார். விஷ்ணு கடவுளும் சகஸ்ரகவசனும் கடும் போர் புரிந்தனர். இது பல்லாயிர கணக்கான வருடங்களாக நடந்தது.
விஷ்ணு கடவுள் அவனின் 999 கவசங்களை அளித்தார். அதன்பின் அவன் உயிருக்கு பயந்து அவனது கர்வத்தை நினைத்து மனம் வருந்தி அவரிடம் மன்னிப்பு கேட்டதால் விஷ்ணு கடவுள் அவனை மன்னித்து உன்னை நான் காப்பாற்றுகிறேன் கூறினார்.