இங்கேதான் குழந்தைகளுக்காக குழி தோண்டினோம்... கனடாவில் மீண்டும் பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிப்பு
கனடாவில் மீண்டும் ஒரு பள்ளியின் அருகே பூர்வகுடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கனடாவில் தொடர்ந்து 1,000க்கும் மேற்பட்ட பூர்வக்குடியின குழந்தைகளின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்ட விடயத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவில்லை. இந்நிலையில், Saskatchewanஇலுள்ள ஒரு இடத்தில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் அருகே ஐந்து இடங்களில் உடல்கள் இருக்கலாம் என தெரியவந்துள்ளது.
மண்ணைத் தோண்டாமலே, ராடார் உதவியுடன் குழந்தைகளின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ள இடங்களைத் தேடிவருகிறார்கள் பூர்வக்குடியினருடன் தொடர்புடைய ஒரு அமைப்பினர்.
அப்படி தேடும்போது, Saskatchewanஇலுள்ள Delmas என்ற இடத்தின் அருகில் அமைந்துள்ள Thunderchild residential school என்னும் உண்டுறை பள்ளியின் அருகே மேலும் உடல்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அந்த இடத்தில் புதைக்கப்பட்ட உடல்களில் சில வேறு இடத்துக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என கருதப்படுவதால், அங்கு தேடுவது கடினமாக இருந்தாலும், அந்த அமைப்புக்கு உதவ சிலர் முன்வந்துள்ளார்கள்.
அவர்கள்... அந்த குழந்தைகளின் உடல்களை அந்த இடத்தில் பல ஆண்டுகளுக்கு முன் புதைத்தவர்கள்!
ஆம், அவர்களில் சிலர் இன்னமும் உயிருடன் இருக்கும் நிலையில், இந்த இடத்தில்தான் நாங்கள் குழந்தைகளை புதைத்தோம் என அவர்கள் சில இடங்களை அடையாளம் காட்டியுள்ளார்கள்.
ஆக்வே, அவர்கள் கூறியதன் அடிப்படையில், அந்த பகுதிகளில் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள் அந்த அமைப்பினர்.