இறந்தவர்களின் உடல்களுடன் சேர்ந்து வாழும் மக்கள்.., எங்கு உள்ளார்கள் தெரியுமா?
நான்கு புறமும் கடல், ஏரி, ஆறு போன்ற நீர்ப்பரப்புகளால் சூழப்பட்ட ஒரு நிலப்பகுதியைக் தீவு என்று அழைக்கிறோம்.
உலகில் நூற்றுக்கணக்கான தீவுகளில் மனிதனின் காலடி சுவடு படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
பல ஆச்சரியங்கள் நிறைந்த தீவுகளில் இந்தோனேசியாவும் ஒன்று.
சுமத்ரா, ஜாவா, சுலவேசி என 17 ஆயிரம் தீவுக் கூட்டங்கள் இணைந்து இந்தோனேசியா என்று அழைக்கப்படுகிறது.
சுமார் 30 கோடிப் பேர் இந்த தீவில் வசிக்கிறார்கள். அவர்களில் டோராஜன் என்ற இனக்குழுவும் ஒன்று.
இந்த சமூகத்தில் உயிரிழந்தவர்களை பாதுகாத்து அவர்களுடன் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.
உடல் இறந்தாலும் உள்ளிருக்கும் ஆன்மா உயிரிழக்காது என்று இந்த டோராஜன் சமூகத்தின் கருதுகிறார்கள்.
பார்மால்டிஹைட் போன்ற வேதிப் பொருட்களை பயன்படுத்தி உயிரிழந்தவர்களின் உடல்களை இந்த சமூகத்தினர் பாதுகாக்கின்றனர்.
அப்படி பாதுகாக்கும் உடல்களுக்கு உணவும், தண்ணீரும் வழங்கிறார்கள்.
இப்படி இறந்த உடல்களை பாதுகாத்து வைத்தால் அதிர்ஷ்டம் கை கொடுக்கும் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |