இந்த தவறை மட்டும் செய்துவிடாதீர்கள்! செய்தால்.. சுவிஸில் நிலைமை மிக மோசமாகிவிடும்: மத்திய குழுவிற்கு நிபுணர்கள் கடும் எச்சரிக்கை
சுவிட்சர்லா்ந்தில் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என நிபுணர்கள் பலர் மத்திய குழுவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தில் எதிர்வரும் வாரத்திற்கான கொரோனா கட்டுப்பாடுகள் என்ன என்பதை மத்திய குழு புதன்கிழமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாட்டில் கொரோனா வழக்குகள் குறைந்து வருதவதற்கு மத்தியில் ஏன் கடுமையான கட்டுப்பாடுகள் தொடர்கிறது என மக்களிடம் பெரிய அதிருப்தி இருக்கிறது என வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும், இனி கூடுதலாக ஒவ்வொரு நாளும் விதிக்கப்படும் ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும். எனவே உடனயடியாக ஊரடங்கை முழுமையாக தளர்த்தி மார்ச் 1ம் திகதி முதல் அனைத்து கடைகளையும் திறக்க வேண்டும் என வர்த்தக அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
அதேசயம், சுவிஸில் கட்டுப்பாடுகளை தளர்த்த இது சரியான நேரமல்ல. மத்திய குழு அவரசப்பட்டு கட்டுப்பாடுகளை தளர்த்திவிடக்கூடாது என பல்வேறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
பெரியளவில் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொரோனாவின் 3வது அலையை தூண்டக்கூடும், இதனால் தொற்று எண்ணிக்கை மீண்டும் உச்சத்தை தொடும், மறுபடியும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்னர்.