பிரித்தானிய ஊடகப் பிரபலம் திடீர் மாயம்... வெளிநாட்டில் சம்பவம்: கவலையில் குடும்பம்
கிரேக்க தீவு ஒன்றில் விடுமுறையை கொண்டாட சென்ற நிலையில் பிரித்தானிய ஊடகப் பிரபலம் Dr Michael Mosley மாயமாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை முதல் காணவில்லை
67 வயதான Dr Michael Mosley கிரேக்க தீவான Symi-ல் ஜூன் 5ம் திகதி புதன்கிழமை முதல் காணவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது. St Nicholas கடற்கரையில் நடக்க சென்ற அவர், உயரத்தில் இருந்து தவறி விழுந்திருக்கலாம் என்றே உள்ளூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தன்று மதியத்திற்கு மேல் சுமார் 7.30 மணியளவில் மைக்கேல் மோஸ்லியின் மனைவி Dr Clare Bailey உள்ளூர் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தமது கணவர் கடற்கரைக்கு சென்ற நிலையில், இதுவரை வீடு திரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து, மைக்கேல் மோஸ்லி நடக்க சென்ற பகுதியில் உள்ளூர் அதிகாரிகள் தேடிச் சென்றனர். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியதாக கூறப்படுகிறது. இதனிடையே, ட்ரோன்கள் மற்றும் பிற தேடல் கருவிகள் உட்பட ஏதென்ஸிலிருந்து ஒரு தேடல் மற்றும் மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மனைவி பொலிசாருக்கு தகவல்
மட்டுமின்றி, உள்ளூர் பேஸ்புக் குழுக்களில் மைக்கேல் மோஸ்லியின் புகைப்பட்டம் உள்ளிட்ட தகவல்கள் பகிரப்பட்டு, உதவி கோரியுள்ளனர். சம்பவத்தன்று நடைப்பயிற்சிக்கு பின்னர் உள்ளூர் நேரப்படி 01.30 மணிக்கு அவர் வீடு திரும்ப வேண்டும், ஆனால் 7.30 மணி வரையில் அவர் வீடு திரும்பாததை அடுத்தே அவரது மனைவி பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் பிறந்து பிரித்தானியாவில் குடியேறியுள்ள மைக்கேல் மோஸ்லி, பிரித்தானிய மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். உணவு முறைகள், குறைந்த கார்போஹைட்ரேட் உணவு போன்ற முறைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றின் காரணமாக அவர் மிகவும் பிரபலமானார்.
பிரபல ஊடக நிகழ்ச்சிகளில் தினசரி வழக்கத்தை மேம்படுத்த சுகாதார உதவிக்குறிப்புகளைப் பற்றி விவாதித்து வந்துள்ளார். மைக்கேல் மோஸ்லி மாயமாகியுள்ள தகவல் அவரது ஆதரவாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
பலர், பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறோம், விரைவில் வீடு திரும்புங்கள் என சமூக ஊடக பக்கங்களில் பதிவிட்டு வருகிறனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |