ரத்தன் டாடாவின் மறைவு... நோயல் டாடாவின் அந்த நகர்வு: அதிர்ச்சியில் உறைந்த எலோன் மஸ்க்
ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் Wi-Fi சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது, உள்நாட்டு வழித்தடங்களில் இந்த சேவையை வழங்கும் முதல் இந்திய விமான நிறுவனம் இதுவாகும்.
ஸ்டார்லிங்க் நிறுவனம்
இந்த அதிரடி நகர்வு எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் போன்ற உலகளாவிய நிறுவனங்களை விட ஏர் இந்தியாவை முந்த வைத்துள்ளது. எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இன்னும் இதே போன்ற சேவைகளை தொடங்கவில்லை.
ஏர் இந்தியா நிறுவன வசமிருக்கும் Airbus A350, Boeing 787-9, மற்றும் குறிப்பிட்ட Airbus A321neo வகை விமானங்களில் தற்போது Wi-Fi சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் தற்போது தங்கள் மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்ட்போன்கள் போன்றவைகளில் சமூக ஊடகங்கள் மற்றும் செய்தியிடல் பயன்பாடுகளைப் பயன்படுத்தி வானத்தில் இணைந்திருக்க முடியும்.
விமானம் 10,000 அடியை எட்டியவுடன் பல்வேறு மின் சாதனங்களை இணைக்க இந்த சேவை அனுமதிக்கிறது. மேலும், நியூயார்க், லண்டன், பாரிஸ் மற்றும் சிங்கப்பூர் போன்ற சர்வதேச வழித்தடங்களில் வெற்றிகரமாக இந்த திட்டத்தை செயல்படுத்தியதன் பின்னரே, முழுமையாக அறிமுகம் செய்துள்ளனர்.
முற்றிலும் இலவசம்
அத்துடன், இந்த சேவையானது முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது. மட்டுமின்றி, படிப்படியாக அனைத்து விமானங்களிலும் இந்த சேவையை அறிமுகம் செய்யவே ஏர் இந்தியா திட்டமிட்டு வருகிறது.
இருப்பினும், விமான பயணங்களின் போது Wi-Fi கிடைப்பது செயற்கைக்கோள் இணைப்பு, விமான வழித்தடங்கள், அலைவரிசை பயன்பாடு மற்றும் அரசாங்க விதிமுறைகளைப் பொறுத்தது என்றும் ஏர் இந்தியா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
பயணிகள் தங்கள் அலைபேசி அல்லது டேப்லெட்டில் "Air India Wi-Fi" நெட்வொர்க்கைத் தெரிவு செய்து, போர்ட்டலில் தங்கள் PNR இலக்கம் மற்றும் கடைசிப் பெயரை உள்ளிட்டு, எளிதாக Wi-Fi உடன் இணைக்க முடியும்.
ரத்தன் டாடாவின் மறைவுக்கு பின்னர் நோயல் டாடாவின் முதன்மையான திட்டங்களில் இதுவும் ஒன்று என குறிப்பிடுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |