பிரித்தானியாவின் இந்த புதிய விதி மிகவும் ஆபத்தானது! கொரோனா சுலபமாக பரவும்:விஞ்ஞானி எச்சரிக்கை
பயணிகள் அறையை விட்டு வெளியேற அனுமதிக்கும் பிரித்தானியாவின் ஹோட்டல் தனிமைப்படுத்தல் விதி மிகவும் ஆபத்தானது என அவுஸ்திரேலிய விஞ்ஞானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலிய தொற்றுநோயியல் நிபுணரும், விக்டோரியாவின் மெல்போர்னில் உள்ள Burnet மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த பேராசிரியர் Michael Toole-லே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்து அவுஸ்திரேலியாவிடமிருந்து பாடம் கற்க வேண்டும்.
அவுஸ்திரேலியாவில் தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பத்தில் பெரியளவில் கொரோனா வைரஸ் பரவுவதை நிறுத்துவதில் கவனம் செலுத்தியது, ஆனால் அவை பலப்படுத்தப்பட வேண்டியிருந்தது.
அறுவைசிகிச்சை முகக் கவசங்களை அணிவது, மக்களை அவர்களின் வீட்டு அறைக்குள்ளே வைத்திருப்பது மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துவது போன்ற முன்னெச்சரிக்கைகள் வைரஸ் காற்றில் பரவுவதை தடுப்பதில்லை.
நகரில் குறிப்பிடத்தக்க சம்பவம் ஒன்று நடந்தது, ஹோட்டலில் தங்கியிருந்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் தனது அறையின் கதவை திறந்துள்ளார், வைரஸ் காற்றின் மூலம் கீழே பயணித்து ஹோட்டல் ஊழியருக்கு பரவியது.
பிரித்தானியா தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களில் பாதுகாவலர்களுடன் சேர்ந்து பயணிகள் தங்கள் அறைகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்படுவது மிகவும் ஆபத்தானது என Michael Toole தெரிவித்துள்ளார்.