எலோன் மஸ்க் அல்ல... உலகின் முதல் டிரில்லியனராக அறியப்படவிருக்கும் நபர்
உலகின் முதல் டிரில்லியனராக யார் அறியப்படுவார் என்பது குறித்து கோடீஸ்வரர் மார்க் கியூபன் கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வெல்ல அவரால் முடியும்
அதில் எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் உட்பட சமகால பெரும் கோடீஸ்வரர்கள் எவரும் இல்லை. ஆனால் எதிர்காலத்தில் வெற்றிகரமான செயற்கை நுண்ணறிவை (AI) உருவாக்கும் ஒருவராக இருக்கும் என்றும் மார்க் கியூபன் குறிப்பிட்டுள்ளார்.
தனது கணிப்பின்படி, ஒரு தனிநபர் சரியான AI கருத்தை புதுமைப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளார் என்றும், இந்த டிரில்லியனர் போட்டியில் எலோன் மஸ்க், ஜெஃப் பெசோஸ் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் போன்ற பணக்காரர்களை வெல்ல அவரால் முடியும் என்றும் வெளிப்படுத்தியுள்ளார்.
சுமார் 5.7 பில்லியன் டொலர் சொத்து மதிப்பு கொண்ட அமெரிக்க தொழிலதிபரான மார்க் கியூபன் தெரிவிக்கையில், தொழில்நுட்பம் மிக வேகமாக மாறி வருகிறது. நாம் இதற்கு முன்பு நினைத்துப் பார்க்காத வகையில் அதைப் பயன்படுத்த யாராவது ஒரு புதிய வழியைக் கண்டுபிடிப்பார்கள்.
ஆனால் AI என்ன செய்யப் போகிறது என்பதில் சிறந்ததையோ அல்லது மிகவும் விசித்திரமானதையோ நாம் இதுவரை பார்த்ததில்லை. அது ஒரு ட்ரில்லியனரை உருவாக்கும் என்று நான் நினைப்பது மட்டுமல்லாமல், அது ஒரு அறியப்படாத நபராகவும் இருக்கலாம்.
எட்ட முடியாது
தற்போது 402 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடன் எலோன் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரராக வலம் வருகிறார். ஆனால் பலரும் எதிர்பார்ப்பது போன்று அவரால் தற்போதைய சூழலில் ட்ரில்லியன் சொத்து மதிப்பை எட்ட முடியாது என்றே கூறப்படுகிறது.
இருப்பினும், ஆரக்கிள் நிறுவனர் லாரி எலிசன் மற்றும் LVMH தலைமை நிர்வாக அதிகாரி பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் அடுத்த பத்தாண்டுகளில் ட்ரில்லியனர் அந்தஸ்தை எட்டலாம் என்றே Oxfam அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |