உச்சந்தலையில் உள்ள பொடுகை விரட்ட இந்த ஒரு பொருளே போதும்!
பொதுவாக கூந்தல் பிரச்சினைகளில் முக்கியமான ஒன்று தான் பொடுகு பிரச்சினை. அதிலும் உச்சந்தலையில் பொடுகு அதிகமாக இருப்பதால் அது முடி ஆரோக்கியத்துக்கு நல்லது கிடையாது.
உச்சந்தலையில் பூஞ்சை வளர்ச்சி என்பது பல காரணங்களால் உண்டாகிறது. ஹார்மோன் மாற்றங்கள், மன அழுத்தம், சில பொருள்களில் உண்டாகும் உணர்திறன், சுற்றுப்புற மாசுபாடு போன்றவை உச்சந்தலையில் பூஞ்சை வளர்ச்சியை அதிகரித்து அதிக தோல் செல்கள் உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
இதிலிருந்து விடுபட கடினமான அதிக பணத்தை தான் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதற்கு தீர்வு உங்கள் சமையலறையில் இருக்கும் பேக்கிங் சோடாவிடம் உண்டு. அதை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
அந்தவகையில் பொடுகை விரட்ட போக்கிங்சோடாவை எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்ப்போம்.
- மூன்று டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவை எடுத்து தேவையான அளவு ஆப்பிள் சீடர் வினிகரை சேர்க்கவும். இரண்டையும் நன்றாக கலந்து பேஸ்ட் ஆக்கவும். இதை உச்சந்தலையில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பிறகு குளிர்ந்த நீரில் முடியை கழுவி எடுக்கவும். இதை வாரம் இரண்டு முறை செய்து வந்தால் பொடுகு குறையும்.
- ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து விடவும். இந்த மூன்றையும் நன்றாக கலந்து பேஸ்ட் ஆக்கி இதை முடியின் மயிர்க்கால்களில் 30 நிமிடங்கள் விட்டு விடுங்கள். பிறகு இது காய்ந்ததும் குளிர்ந்த நீரில் முடியை கழுவி விடவும். வாரத்தில் இரண்டு நாட்கள் வரை இதை செய்து வந்தால் பொடுகு குறையும்.
- முட்டையின் மஞ்சள் கரு உடன் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் ஆலிவ் எண்ணெய் கலந்து பேஸ்ட் ஆக்கவும். இந்த மூன்றும் கலந்து உச்சந்தலையில் தடவி ஹேர் கவர் போட்டு 30 நிமிடங்கள் விடவும். இவை நன்றாக காய்ந்ததும் தலைமுடியை கழுவி எடுக்கவும். இது பொடுகை படிப்படியாக நீக்க செய்யும்.
- பேக்கிங் சோடாவை எலுமிச்சையுடன் பயன்படுத்தி பொடுகை நீக்கலாம். இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து வைக்கவும். இப்போது இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி இலேசாக மசாஜ் செய்து விடவும். தலைமுடி காய்ந்த பிறகு கழுவி விடவும்.