இந்தியாவில் ரயிலில் இந்த ஒரு பொருளை மட்டும் எடுத்து செல்லக்கூடாது.., எது தெரியுமா?
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் சாமானிய மக்கள் கூட ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
பயணிகளின் பயண தேவையை தீர்த்து வைப்பதில் இந்திய ரயில்வே துறை பெரிய பங்கு வகிக்கிறது.
இந்நிலையில், உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளில் இந்திய ரயில்வே நான்காவது இடத்தில் உள்ளது.
அதேபோல், ரயில் பயணத்தின் போது பயணிகளுக்கு பல்வேறு விதிகள் விதிக்கப்பட்டு உள்ளன.
ரயிலில் அடுப்புகள், எரிவாயு சிலிண்டர்கள், எரியக்கூடிய ரசாயனங்கள், பட்டாசுகள், அமிலங்கள், தோல் பொருட்கள், கிரீஸ், சிகரெட் மற்றும் வெடிபொருட்கள் போன்ற துர்நாற்றம் வீசும் பொருட்களை ரயில்களில் எடுத்துச் செல்லக்கூடாது என்று விதிகள் உள்ளன.
ரயில்வே விதிகளின்படி, எந்தவொரு பயணியும் மது அல்லது போதைப்பொருள் பயன்படுத்தி இருந்தால் ரயிலில் பயணிக்க முடியாது.
இதேபோன்று சில பழங்கள் ரயில்களில் எடுத்துச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு தண்டனை விதிக்கப்படுமாம்.
இதற்கிடையே, காய்ந்த தேங்காயைத் தவிர அனைத்து பழங்களையும் பயணிகள் ரயிலில் எடுத்துச் செல்லலாம்.
காய்ந்த தேங்காயின் வெளிப்புற பகுதி, எளிதாக தீ பற்றும் வகையில் இருப்பதால், இதை ரயிலில் எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |