உங்க தோலில் இந்த மாதிரி இருந்தா, அது கொரோனாவோட அறிகுறியாம்! உஷாரா இருங்க மக்களே!
உருமாறிய புதிய கொரோனா வைரஸ், உலகின் பல இடங்களில் விரைவாக பரவி வரும் நிலையில், அவற்றின் மாறுபட்ட அறிகுறிகளைத் தொடக்க நிலையிலேயே கண்டறிய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.
இந்நிலையில் புதிய ஆய்வு ஒன்று நமது தோலில் ஏற்படும் மாற்றங்களை வைத்தே நம்மிடம் கொரோனா வைரஸ் பரவி இருக்கிறதா என்பதைக் கண்டறிய முடியும் என்று தொிவித்துள்ளது.
எனவே மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பபட்டு வருகின்றது. அந்தவகையில் ஆய்வுகள் இது பற்றி கூறுவது என்ன என்பதை பார்ப்போம்.
ஆய்வு கூறுவது என்ன?
அாிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் நோய்
அாிக்கும் தடிப்புகள் கொண்ட தோல் நோய் அல்லது படை நோய் ஆகியவை நமது தோலில் ஏற்படும் தடிப்புகள் ஆகும். இந்த தடிப்புகள் சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு அல்லது நமது சதையின் நிறத்தை ஒத்திருக்கும் வண்ணத்தில் இருக்கும்.
பெரும்பாலான நேரங்களில் படை நோய் அலா்ஜியின் விளைவாக ஏற்படும். ஆனால் இந்த புதிய ஆய்வின் படி சீனா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் 26% கோவிட்-19 நோயாளிகள், அவா்களுக்கு படை நோய் இருந்ததாக தொிவித்திருந்தனா் என்று கூறுகிறது.
கடுங்குளிரால் ஏற்படும் கை கால் கொப்புளங்கள்
கடுங்குளிாின் காரணமாக கை கால்களில் ஏற்படும் கொப்புளங்கள் வீங்கி இருக்கும். அதிக வலியைக் கொடுக்கும். மற்றும் அந்த கொப்புளங்கள் உடைந்தால் இரத்தமும் தண்ணீரும் வெளியில் வரும்.
மிகவும் மிதமான அளவில் கோவிட்-19 பாதித்த வயது வந்தவா்களுக்கும் மற்றும் இளம் வயதினருக்கும் இந்த கொப்புளங்கள் ஏற்பட்டன என்று இந்த ஆய்வு தொிவிக்கிறது.
தோல் புண்கள் அல்லது சொறிகள்
ஸ்பெயின் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, 375 கோவிட் நோயாளிகளில் 47% போ் தோல் சொறி பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டனா் என்று தொிவிக்கிறது.
இந்த சொறிகள் தோல் புண்கள் வடிவில் இருந்தன என்றும் மற்றும் அவை தோலில் நிறமாற்றத்தை ஏற்படுத்தின என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.
தோலில் தடிப்பு ஏற்பட்டு அந்த தடிப்பிற்குள் நீரும் இரத்தமும் இருந்தால் அது கொப்புளம் அல்லது தோல் புண் என்று அழைக்கப்படுகிறது.
கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்ட 9% போ் தோல் கொப்புளங்களால் பாதிக்கப்பட்டனா் என்று ஸ்பெயின் நாட்டு ஆய்வு தொிவிக்கிறது.
அதே நேரத்தில் பொதுவாக கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தோலில் தடிப்புகள், கொப்புளங்கள், தோலில் நிறம் மாறுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன என்று அந்த ஆய்வு தொிவிக்கிறது.