பிரித்தானியாவில் இந்த நகரில் இதற்கு தடை! முதல் நாளே மக்கள் செய்த செயல்: அதிர்ச்சியூட்டிய வீடியோ காட்சிகளால் திடீர் அறிவிப்பு
பிரித்தானியாவில் ஊரடங்கு விதிமுறைகளில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டதால், அதன் விளைவாக பொதுஇடத்தில் கூடிய மக்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற தவறியதால், நாட்டிங்ஹாம் நகர சபை பொது இடத்தில் மது அருந்துவதற்கு தடை செய்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு பிரித்தானியாவில் தடுப்பூசி வேகமாக போடப்பட்டு வருகிறது.
இருப்பினும் ஐரோப்பாவில் நிலவும் நிலையை போரிஸ் அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அதுமட்டுமின்றி, கடந்த 29-ஆம் திகதி முதல் ஊரடங்கின், இங்கிலாந்தில் ஆறு பேருக்கு மேல் கூட அனுமதி, போன்ற சில தளர்வுகள் விதிக்கப்பட்டது.
ஆனால், அதன் விளைவாகமக்கள் பூங்காக்கள் போன்ற பகுதிகளில் கூட்டம் கூட்டமாக குவிந்தனர்.
இதனால் இதைக் கட்டுப்படுத்துவது கடும் சிரமத்தை ஏற்படுத்தியது. சிலர் மற்றொருவருடன் சண்டையிடுவது, வாக்குவாத்தில் ஈடுபடுவதாக இருந்தனர்.
இதன் காரணமாக Nottingham நகர் சபை பொது இடத்தில் மது அருந்த தடை என்று அறிவித்துள்ளது.
கவுன்சில் தலைவர் டேவிட் மெலன் கூறுகையில், நாங்கள் மூத்த பொலிஸ் அதிகாரிகளுடன் கலந்துரையாடினோம், எங்கள் பூங்காக்களில் அதிகம் பேர் வந்து செல்கின்றனர்.
இதனால், நாட்டிங்ஹாமில் பொது இடங்களில் மது குடிப்பதற்கு அனுமதி இல்லை. இன்று முதல் இங்கிருக்கும் பூங்காக்களுக்கு மக்கள் மதுவுடன் வந்தால் அது கைப்பற்றப்படும்.
பூங்காக்களை மக்கள் சுத்தமின்றி வைத்துக் கொள்வது ஏற்றத்தக்கது அல்ல, தொற்றுநோய்களின் போது பூங்காக்கள் பலருக்கு ஒரு உயிர்நாடியாக இருந்துள்ளது.
அவற்றை திறந்த, சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்க ஊழியர்கள் அயராது உழைத்துள்ளனர்.
கடந்த 29-ஆம் திகதி பூங்காவில் மக்கல் கடல் போன்று காணப்பட்டதன் காரணமாகவும், பிரச்சனை ஏற்பட்டதன் காரணமாகவும், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பூங்காவில் நூற்றுக்கணக்கான மக்கள் விருந்து வைப்பது, மரங்களில் ஏறுவது, நடனம், சண்டை, மது அருந்துவது போன்ற அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சிகளை சமூகவலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.
அதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். மேலும், ஒரு சில சிறுபான்மையினர் கட்டுப்பாடுகளை மீறி நடப்பதை பார்க்கும் போது கவலையாக இருக்கிறது.
ஒருவருக்கொருவர் பாதுகாப்பாக இருக்க நாம் அனைவரும் கடந்த ஆண்டு எப்படி இருந்தோம். அதை நாம் மனதில் வைத்து கொள்ள வேண்டும்.
இங்கு கொரோனா வைரஸ் காரணமாக 600-க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர். நாங்கள் அவர்களின் குடும்பங்களுக்கும், மற்றும் உயிரிழந்த முன்னணி தொழிலாளர்களுக்கும் கடமைப்பட்டிருக்கிறோம்.
எனவே இந்த தளர்வு கொரோனா பரவுவதைக் குறைக்க வேண்டுமே தவிர, அது பாதிப்பாக மாறிவிடக் கூடாது.
நாம் அனைவரும் அதன் விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். தற்போது ஆறு பேர் அல்லது இரண்டு வீடுகளை சேர்ந்த நபர் வெளியே சந்திக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால் சமூக இடைவெளி போன்றவை கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது சொந்தப் பொறுப்பாக இதை ஏற்க வேண்டும் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து நாட்டிங்ஹமில் பொலிசார் ரோந்து பணியில் அதிகமாக இருப்பார்கள் எனவும், அப்படி கொரோனா விதிமுறைகளை மீறினால் 200 பவுண்ட் அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



