இந்த கோரிக்கை வைத்தால் அவர்கள் ஜேர்மனிக்கு தான் செல்ல வேண்டும்.., பவன் கல்யாண் பேச்சு
இந்தியாவில் வக்பு வாரியம் இருந்தால், சனாதன தர்மம் பாதுகாப்பு போர்டு ஏன் இருக்கக் கூடாது என்று ஆந்திர மாநில துணை முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் பேசியது
ஆந்திர மாநில துணை முதலமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி என்றால் கூச்சல், குழப்பம் கட்சி என்று தான் அர்த்தம்.
சட்டமன்றத்தில் ஜனசேனா கட்சியை இரண்டாவது பெரிய கட்சியாகவும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை மூன்றாவது கட்சியாகவும் மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இது தான் அவர்களுக்கு பிரச்சனையாக இருக்கிறது.
11 இடங்கள் தான் பெற்றிருக்கிறோம் என்பதை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. 2019-ம் ஆண்டில் ஆட்சியில் இருந்ததை வைத்து எதிர்க்கட்சி அந்தஸ்து கொடுக்கப்பட வேண்டும் என்று அர்த்தம் அல்ல.
பெற்ற வாக்குகள் அடிப்படையில் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால் அவர்கள் ஜேர்மனிக்கு தான் செல்ல வேண்டும்.
அங்குள்ள ஜனநாயகம் வாக்கு சதவீதத்தின் அடிப்படையிலானது. நமது நாட்டில் அதை அனுமதிக்க முடியாது. இந்தியாவில் வக்பு வாரியம் இருந்தால், சனாதன தர்மம் பாதுகாப்பு போர்டு ஏன் இருக்கக் கூடாது?" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |