ஐபிஎல் தொடருக்காக இந்த முறை CSK போடும் செம பிளான்! இந்த வீரர்கள் மட்டுமே ஏலத்தில் எடுக்க குறி என தகவல்
இந்தியாவில் வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் கலக்குவதற்காக சென்னை அணி செம பிளான் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி சொதப்பியதால், இந்த முறை ஒரு வலுவான இளம் படையுடன் களம் இறங்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக சென்னை அணி சரியான பிளான் போட்டுள்ளதாம், அதாவது ஐபிஎல் ஏலம் சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்த முறை ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடப்பது உறுதியாகிவிட்டது என்பதால், இந்த ஏலத்தில் மும்பை மற்றும் தமிழக அணிகளில் முதல்தர போட்டிகளில் ஆடிய வீரர்களை குறி வைக்க சென்னை அணி முடிவு செய்துள்ளதாம்.
இவர்களை சென்னை அணியில் எடுத்து தீவிர பயிற்சி கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாம்.
முதல் தர போட்டிகள் மஹாராஷ்டிராவில் உள்ள வான்கடே மைதானம், மும்பை மைதானம், டிஒய் பாட்டீல் மைதானம் ஆகிய மைதானங்களில் நடக்கும்.
நாக் அவுட் போட்டிகள் எல்லாம் அகமதாபாத்தில் நடக்கும்.
இதனால் இந்த மைதானங்களில் சிறப்பாக விளையாடும் வீரர்களை சென்னை அணி தெரிவு செய்து, ஏலத்தில் எடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், ரெய்னா, ராபின் உத்தப்பா போன்ற வீரர்களை சென்னை அணியில் துருப்பு சீட்டாக பயன்படுத்தும் என்று கூறப்படுகிறது.
இவர்களில் ரெய்னா அஹமதாபாத் மைதானத்தில் நன்றாக ஆட கூடியவர்.
ராபின் உத்தப்பா மஹாராஷ்டிரா மைதானம் போன்ற கண்டிஷன்களில் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டவர் என்பதால், இவர்கள் சென்னை அணியின் முக்கிய துருப்பு சீட்டாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.