இந்த முறை டி20 உலகக்கோப்பை எங்களுக்கு தான்! பாகிஸ்தான் வீரர் சொன்ன வினோத காரணம்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை இந்த முறை எங்களுக்கு தான் என்று பாகிஸ்தான் அணி வீரரான இமாத் வாசிம் கூறியுள்ளார்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில், அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டரான இமாத் வாசிம் டி20 உலகக்கோப்பை குறித்து கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அனைத்து மைதானங்களும் எங்களுக்கு சொந்த மைதானங்கள் போன்றவை.
ஏனெனில் கடந்த பல ஆண்டுகளாக நாங்கள் இங்கு தான் நிறைய போட்டிகளில் விளையாடி வருகிறோம். எங்களுடைய ஹோம் ரவுண்டாக இந்த ஐக்கிய அரபு மைதானங்கள் தான் இருந்து வருகின்றன.
எனவே இங்கு உள்ள சூழ்நிலை மற்றும் மைதானத்தின் தன்மை என அனைத்தும் பாகிஸ்தான் அணிக்கு சாதகமாக அமையும். அதுமட்டுமின்றி எங்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்.
எனவே நிச்சயம் 100 சதவீத உழைப்பை நாங்கள் வழங்கி இந்த டி20 உலக கோப்பை தொடரை கைப்பற்றுவோம் என்று உறுதியாக கூறியுள்ளார்.