குழந்தைகளுடன் உணவகத்தினுள் வர வேண்டாம்! இந்த முடிவுக்கு இதுதான் காரணமாம்
அமெரிக்காவிலுள்ள ஒரு உணவகத்தில் குழந்தைகளுடன் வருகை தருவது தடைச் செய்யப்பட்டுள்ளது.
சிறுவர்களினால் ஏற்படும் அசௌகரியங்கள்
பொதுவாக குழந்தைகள் உள்ள வீட்டில் குழந்தைகள் இல்லாமல் தியேட்டர், கடைகள் மற்றும் உணவகங்களுக்கு செல்வது குறைவாக தான் இருக்கும். ஏனெனின் எங்கு கிளம்பினாலும் அவர்கள் வந்து ஓட்டிக் கொள்வார்கள்.
மேலும் தியேட்டர் சென்றால் அங்குள்ள அதிர்வுச் சத்தம் கேட்டு குழந்தைகள் பயந்து அழுவது வழக்கம். இதனால் பக்கத்தில் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு பிர்ச்சினையாக இருக்கும்.
இது போன்ற காரணங்களால் சில தியேட்டர்களில் குழந்தைகளுடன் வருவதை தடைச் செய்துள்ளார்கள். இதனை தொடர்ந்து மேற்குறிப்பிட்டவாறு சம்பவம் தியேட்டர் மட்டுமன்றி வணிக வளாகங்கள், உணவகங்களிலும் நடப்பதுண்டு. இதனால் சில வாடிக்கையாளருக்கு ஒரு திருப்தி இருக்காது.
உணவகத்தின் நிபந்தனை
இந்த நிலையில் அமெரிக்காவிலுள்ள ஒரு உணவகத்திற்கு 10 வயதிற்கு குறைவாக இருக்கும் குழந்தைகள் கொண்டு வருவது முற்றாக தடைச் செய்யப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைகளை அந்த உணவக நிர்வாகம் அதிரடியாக அமெரிக்காவிலுள்ள மக்களுக்கு அறிவித்துள்ளது.
இந்த நிபந்தனையை நியூ ஜெர்சியில் உள்ள நெட்டிஸ் ஹவுஸ் ஆஃப் ஸ்பகெட்டி என்ற உணவகம் தான் வெளியிட்டுள்ளது. இந்த நிபந்தனை எதிர்வரும் மார்ச் 8ம் தேதி முதல் அமுலாக்கப்படவுள்ளதாகவும், “ எங்களுக்கு குழந்தைகள் என்றால் பிரியம் தான். எங்களின் உணவகத்தை சுத்தம் செய்வது கொஞ்சம் கடுமையாக இருக்கிறது.
இதனால் இந்த பாலிசியை கொண்டு வந்திருக்கிறோம். இந்த நிபந்தனை உங்களுக்கு சற்று கோபமாக தான் இருக்கும். ” எனவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “இப்படி ஒரு நிபந்தனை என்றால் யாரும் உணவகத்திற்கு வர மாட்டார்களே” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.