நதியில் தோன்றிய தங்க நீர் தாரைகள்! (வீடியோ)
பொதுவாகவே இயற்கையின் அதிசயங்கள் நம்மை வியப்பில் ஆழ்த்தும். அந்தவகையில் ரஷ்யாவின் பெர்ம் பகுதியில் உள்ள காமா நதியில் திடீரென தங்கமாக மாறியுள்ளது ஆறு. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
வைரலாகும் வீடியோ
ரஷ்யாவின் பெர்ம் பகுதியில் உள்ள காமா என்ற நதியில் முகில் நீர் தாரைகள் உருவாகியுள்ளன.
இந்த காட்சியானது பார்ப்பதற்கு நீர் நிலைகளில் இருந்து மேகங்கள் தண்ணீரை உறிஞ்சுவது போன்று இருந்துள்ளது.
A little about nature and the difference of mentality. Kama River. Perm region. July 13, 2023. pic.twitter.com/AaWTHqrnCR
— Zlatti71 (@djuric_zlatko) July 17, 2023
இந்த பிரமிக்க வைக்கும் காட்சி பார்வையாளர்களையும் இணையவாசிகளையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ட்விட்டரில் பகிரப்பட்ட இந்த வீடியோவில் 1.29 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது.
வானிலையாளர்களின் கருத்து,
கடலின் மேல் பரப்பில் வீசும் காற்று குளிர்ந்த காற்றாகவும் கடல் காற்று சற்று வெப்பமாகவும் இருக்கும் போது கடலில் நீர் தாரைகள் ஏற்படும்.
பொதுவாக பருவநிலை மாற்றம் ஏற்படும் போது இது போன்ற நிகழ்வுகள் ஏற்படும்.
மேலும் கடலின் அருகில் வாழ்பவர்கள் இதை பார்ப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |