குலாப் ஜாமூனுக்கு பிரபலமான கிராமம் பற்றி தெரியுமா?
India Famous Gulab Jamun Village: குலாப் ஜாமூனுக்காகவே பிரபலமான கிராமம் ஒன்றினைக் குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்வோம்.
குலாப் ஜாமூன் கிராமம்
பொதுவாக இனிப்பு என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதிலும் குலாப் ஜாமூன் என்றால் இன்னும் அதிகமாக இஷ்டப்பட்டு சாப்பிடுவார்கள்.
நாம் வீடுகளில் செய்யும் குலாப் ஜாமூன் ஒரு கிராமத்திற்கு மிகவும் பிரபலமாக மாறியுள்ளது. நம்மில் பலருக்கும் தெரிந்திடாத அந்த குலாப் ஜாமூன் கிராமத்தினை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மாநிலமான உத்தர பிரதேசத்தில் லக்கிபூர் கேரி மாவட்டத்தில் உள்ள மைகல்கஞ்ச் என்ற கிராமம் தான் இதுவாகும்.

அதாவது டெல்லியையும் லக்னோவையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் குலாப் ஜாமூன் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த சாலை ஓரத்தில் எண்ணற்ற இனிப்பு கடைகளும் இருக்கின்றது. நாள் முழுவதும் குலாப் ஜாமூன் தயாரிக்கப்பட்டு சுட சுட வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றனர்.
வாடிக்கையாளர்களும் அங்கு சாப்பிடுவது மட்டுமின்றி தங்களது வீட்டிற்கும் வாங்கிச் செல்கின்றனர். இந்த சாலையோர கடைகளில் குலாப் ஜாமூன் அதிகமாக விற்கப்படுவதால் மைகல்கஞ்ச், குலாப் ஜாமூன் கிராமம் என்று அழைக்கப்படுகின்றது.
உண்மை கதை தான் என்ன?
1941ம் ஆண்டு தன்பால் மிதாய் பந்தர் என்ற பெயரில் ஒரே ஒரு கடை தொடங்கப்பட்ட நிலையில், நாளடைவில் குலாப் ஜாமூனின் விற்பனை அமோகமாக இருந்ததால் பல கடைகள் உருவாகியுள்ளது.
1970ம் ஆண்டுகளில் இந்த இடமானது குலாப் ஜாமூனுக்காக மிகவும் புகழ் பெற்றதாகவும், பல கடைக்காரர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரமாகவே இவை மாறியுள்ளது.
இந்த சாலை ஓரத்தில் சுமார் 25 சிறிய கடைகள் இருப்பதாகவும், ஆண்டு முழுவதும் குலாப் ஜாமூன் விற்கப்படவும் செய்கின்றது.

மேலும் என்ன ஸ்பெஷல்?
மைகல்கஞ்ச் கிராமத்தில் தயாரிக்கப்படும் குலாப் ஜாமூன் ஏன் இவ்வளவு பரபரப்பாக பேசப்படுகின்றது என்றால் இதில் பரிமாறப்படும் முறைகள் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது.
சூடாக பதயாரிக்கப்பட்டு பரிமாறப்படுவதுடன், பாகின் சுவையை மக்கள் அதிகமாக விரும்புகின்றனர். மேலும் சில கடை வியாபாரிகள் சிறிய மண் பானைகளிலும் பரிமாறுகின்றனர்.

அதுமட்டுமின்றி இவர்கள் குலாப் ஜாமூன் தயாரிப்பதற்கான பொருட்களான பால் பவுடர், கோதுமை மாவு, மைதா இவற்றினை சரியான கலவையில் கலந்து மென்மையாக தயாரிக்கின்றனர்.
சில கடைகளில் நெய்யில் பொன்னிறமாக பொரித்தும் எடுக்கின்றனர். அதுமட்டுமின்றி எண்ணெய் மற்றும் நெய்யின் வெப்பநிலையையும் சீராக வைத்து செய்கின்றனர்.

ஏனெனில் வெப்பநிலை ஆரம்பித்தில் அதிகமாக இருந்தால் குலாப் ஜாமூனின் வெளிப்பகுதி கருப்பாகிவிடுவதுடன், உள்ளே வேகமாலும் ஆகிவிடும்.
மேலும் பாகு தயாரிப்பதில் அதிக கவனம் எடுக்கின்றனர். பாகு மிகவும் தண்ணியாகவோ, கெட்டியாகவே இல்லாமல் சரியாக பதத்தில் வைப்பதால் சுவை இன்னும் அதிகமாகவே இருந்து வருகின்றது.