பாபர் அசாமை ஓரங்கட்டிய திசாரா! தோனி தலைமையில் ஆல்-டைம் டி20 அணி அறிவிப்பு
ஓய்வு பெற்ற இலங்கை வீரர் திசாரா பெரேரா, டி20 போட்டிக்கான தனது ஆல்-டைம் பிளேயிங் லெவன் அணியை அறிவித்துள்ளார்.
எம்.எஸ்.தோனியை கேப்டனாக அறிவித்துள்ள திசாரா, பாபர் அசாம் உட்பட பாகிஸ்தான் வீரர்கள் யாரையும் தனது ஆல் டைம் டி20 பிளேயிங் லெவன் அணியில் தேர்வு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திசாரா பெரேராவின் ஆல்-டைம் டி20 பிளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல்:
- கிறிஸ் கெய்ல் (வெஸ்ட் இண்டீஸ்)
- ரோகித் சர்மா (இந்தியா)
- விராட் கோலி (இந்தியா)
- ஏபி டிவில்லியர்ஸ் (தென் ஆப்பிரிக்கா)
- டேவிட் மில்லர் (தென் ஆப்பிரிக்கா)
- தோனி (இந்தியா) (கேப்டன்)
- ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்)
- சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்)
- பும்ரா (இந்தியா)
- மிட்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா)
- ஷோன் டைட் (அவுஸ்திரேலியா)
திசாரா அணியில் அதிகபட்சமாக 4 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர், அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அவுஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த தலா 2 வீரர்களும், ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு வீரரும் இடம்பிடித்துள்ளனர்.
முன்னணி நாடுகளான இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்தை சேர்ந்த வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.