34 வயதில் 500வது வெற்றியை பெற்ற ஜேர்மனி வீரர்!
பாயர்ன் முனிச் அணிக்காக விளையாடி 500வது வெற்றியை பெற்றுத் தந்து தாமஸ் முல்லர் சாதனை படைத்துள்ளார்.
Aleksandar Pavlovic கோல்
பண்டஸ்லிகா தொடரில் Monachengladbach அணிக்கு எதிரான போட்டியில் Bayern Munich அணி மோதியது.
ஆட்டத்தின் 35வது நிமிடத்தில் Monachengladbach வீரர் நிகோ எல்வெடி (Nico Elvedi) கோல் அடித்தார்.
அடுத்த 10வது நிமிடத்திலேயே பதிலடியாக, முல்லர் பாஸ் செய்த பந்தை Aleksandar Pavlovic (45வது நிமிடம்) அபாரமாக கோலாக மாற்றினார்.
@FCbayern
ஹரி கேன் தலையால் முட்டி கோல்
அதன் பின்னர் ஆட்டத்தின் 70வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ஹரி கேன் தலையால் முட்டி கோல் அடித்தார். பாயர்ன் அணியின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் Monachengladbach அணி திணறியது.
@FCbayern
இந்த நிலையில் பாயர்ன் வீரர் Matthijs de Ligt 86வது நிமிடத்தில், ஒரே கிக்கில் வந்த பந்தை தலையால் முட்டி கோல் அடித்தார்.
@FCbayern
தாமஸ் முல்லர் சாதனை
இதன்மூலம் பாயர்ன் முனிச் அணி 3-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
@FCbayern
இது அந்த அணியின் தாமஸ் முல்லருக்கு 500வது வெற்றியாகும். Bayern Munich அணிக்காக இந்த மைல்கல்லை எட்டிய முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை முல்லர் படைத்தார்.
34 வயதாகும் தாமஸ் முல்லர் பாயர்ன் முனிச் அணிக்காக 480 போட்டிகளில் 164 கோல்கள் அடித்துள்ளார்.
⭐ ??????? ⭐ @esmuellert_#FCBBMG #MiaSanMia #FCBayern pic.twitter.com/gHtHZhBcV2
— FC Bayern München (@FCBayern) February 3, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |